தேவன் அசாத்தியமானதை சாத்தியமாக்குகிறார்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
குறிப்பிட்ட சிலரை, குறிப்பாக நாம் விரும்புபவர்களையும் நமக்குப் பிரியமானவர்களையும் உற்சாகப்படுத்துவது எளிது. அதே சமயத்தில், வேறு சில நபர்களை உற்சாகப்படுத்துவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கலாம்… அதற்கு நாம் சில கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
உண்மையான உற்சாகமூட்டும் ஒரு விசுவாசியை புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம், “..சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்” இருந்தான் (வேதாகமத்தில் அப்போஸ்தலர் 4:36ஐ வாசித்துப் பார்க்கவும்)
சில சமயங்களில் சில நபர்களால் நமக்குப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்களுடனான தொடர்பு நமக்கு முட்களை உருவாக்குகிறது, ஆனால் ஏன் அப்படி நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. இந்த எரிச்சலின் காரணம் பொறாமையுடன் தொடர்புடைய உணர்வாகவோ அல்லது மன்னிக்க முடியாத தன்மையின் விளைவாகவோ இருக்கலாம் என்பதை நாம் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளத் துணிவதில்லை… உன்னுடைய வாழ்விலும் இதுபோன்ற சூழ்நிலை உள்ளதா?
கர்த்தரைக் கனம்பண்ணும் விதமாக நாம் இந்தச் சூழ்நிலையை எப்படி சரிசெய்வது… ஏனென்றால், இதைத்தான் நீயும் விரும்புகிறாய், இல்லையா?
இதற்காக நீ விலைக்கிரயம் செலுத்த வேண்டியிருந்தாலும் கூட, கடினமானவர்களை ஆறுதல்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் இன்றே முடிவெடு. அவர்கள் அப்படிப்பட்ட நபராக இருப்பதற்காகவும் அவர்கள் செய்யும் சரியான விஷயங்களுக்காகவும் அவர்களுக்கு நன்றி சொல். ஒருவேளை தாமதமாகலாம், ஆனால் நிச்சயமாக, நீ அவர்களை முன்னர் புரிந்துகொண்டதைப்போலவே அதற்குப் பின்பு புரிந்துகொள்ள மாட்டாய், நீ அவர்களை நேசிக்கத் தொடங்குவாய். மனதார நேசிக்கத் தொடங்குவாய்.
இன்று அது சாத்தியமற்றதுபோல தோன்றலாம், ஆனால் சாத்தியமற்றதை சாத்தியமாக்குபவர் நம் தேவன் அல்லவா?
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “சகோதரர் எரிக், தேவனுக்கும் உங்கள் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்குப் பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும், உங்கள் பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த குறிப்புகள் அனைத்தும், நான் கடந்து சென்றுகொண்டிருந்த சூழ்நிலை அனைத்தையும் மேற்கொள்ள எனக்கு உதவின. உங்கள் வாழ்வின் மீதும் ஊழியத்தின் மீதும் உள்ள அபிஷேகத்திற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறேன். என் சூழ்நிலையில் ஜீவனுக்கு ஏதுவான வார்த்தைகளைப் பேச அவர் உங்களைப் பயன்படுத்தியதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்; நான் தொடர்ந்து முன்னேறவும், நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளவும் மற்றும் அந்த சூழ்நிலையைக் கடந்து செல்லவும் அது என்னை பெலப்படுத்துகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.” (ஷெரின்)