தேவனே உனக்கு சிறந்த துணை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனே உனக்கு சிறந்த துணை!

இப்பொழுது நீ எப்படிப்பட்ட போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது இனிமேல் அப்படி சந்திக்க நேர்ந்தாலும் சரி, தேவன் ஒருவரே உனக்கு சிறந்த துணையாயிருப்பார்.

தேவன் மட்டுமே உனக்குத் துணையாயிருப்பதை பரிசுத்த வேதாகமம் இவ்வாறு உறுதிப்படுத்துகிறது. “அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.” (பரிசுத்த வேதாகமம், சங்கீதம் 144:2)

தேவன் தந்த தரிசனத்திற்கு நேராய் செல்லும் பாதையில் நடக்கும்போது, நீ சோர்வடையக் கூடும். போராட்டங்களும் தாமதங்களும் உனக்குள் ஊக்கமின்மையை விதைத்துவிடுவதைப்போலத் தோன்றலாம்.

“கர்த்தாவே போதும், என்னால் இயலவில்லை!” என என்றாவது நீ சொன்னதுண்டா?

ஒருவேளை இன்று நீயும் இது போன்ற சூழலில் இருக்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள். நீ தனியாக இல்லை; தேவன் உனக்கு அரணான கோட்டையாயிருக்கிறார். அந்தக் கோட்டைக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் உண்டு, மனநோவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, உன் பாரங்களை இறக்கி வைக்க ஒரு இடம் உண்டு, தேவனுடைய தைரியத்தினாலும், வல்லமையாலும் நிரப்பப்படும்படி மேன்மையான அந்த இடத்திற்கு நீ வா.

தேவன் உனக்குப் புகலிடமாய் இருக்கிறார்! நீ எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை, நீ இருக்கிற வண்ணமாகவே அவரிடம் வா! உன் இருதயத்தின் ஆழங்களையும், உன் காயங்களையும் நீ அவரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, அவர் உன் காயங்களைக் குணப்படுத்தி உன்னை சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

தேவன் உன்னை விடுவிப்பவராயிருக்கிறார்! உன் வாழ்வை முழுமையாய் வாழ விடாமல் உன்னை பின்நோக்கித் தள்ளுகின்ற எல்லாவற்றிலிருந்தும், உன்னை சிறுமைப்படுத்துகிறவர்களிடம் இருந்தும் உன்னை விடுவிக்க உன் தேவன் வல்லவராய் இருக்கிறார்.

இன்று இயேசு உன்னை விடுவிக்கிறார்! இன்று நீ சந்திக்கும் மோசமான சூழலில் கூட, தேவன் உன்னை வெற்றி பெறச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் மீது உன் கண்களைப் பதிய வை! உனக்கான அதிசயம் உன்னைத் தேடி வந்துகொண்டிருக்கிறது.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!