தேவனுடைய வரத்தை வெளிப்படுத்து

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனுடைய வரத்தை வெளிப்படுத்து

விதைக்கப்படும் ஒரு விதையிலிருந்துதான் சகல பலனும் வெளிவரத் தொடங்குகிறது. இந்த உலகத்தை உருவாக்க வார்த்தை “விதைக்கப்பட்டது”. பழங்களும் காய்கறிகளும் வேண்டுமென்றால், நாம் விதையை விதைக்க வேண்டும். அன்பு என்ற விதையின் கனியே குழந்தைகளாவர்.

விதையின் அளவு, நிறம் மற்றும் அமைப்பு போன்றவை அவ்வளவு முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால், விதைக்குள் “பொதிந்திருக்கிற” சாத்தியக் கூறுகளின் உள்ளடக்கமே முக்கியமானதாகும்! இருப்பினும், எல்லா விதைகளையும் போலவே, விதையானது நல்ல நிலையில் விதைக்கப்பட வேண்டும், இதனால் அதன் உண்மையான சாராம்சம் வெளிப்படும்.

உன் வாழ்க்கையும் அப்படித்தான்! இது மேலோட்டமான தோற்றத்தைப் பொருத்தது அல்ல, மாறாக, உனக்குள் என்ன இருக்கிறது என்பதையும், சிருஷ்டிகரான ஆண்டவர் உன் இருதயத்தின் ஆழத்தில் எதை வைத்திருக்கிறார் என்பதையும் பொருத்ததாகும் … உன் வரங்கள், உன் திறமைகள், உன் கனவுகள் போன்றவற்றைப் பொருத்ததாகும்.

வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்க வேண்டுமானால், அவை விடுவிக்கப்பட வேண்டும், உன் இருதயத்திலிருந்து அவை வெளியே கொண்டுவரப்பட வேண்டும். விதைத்துப் பயிரிடப்பட்டால் மட்டுமே கனி தர இயலும்… அவை காணக்கூடிய வகையில் மற்றவர்களை ஆசீர்வதிக்கும் ஒரு கனியாய் இருக்கும்.

நீ இனியும் காத்திருக்காதே… தேவன் உனக்குள் வைத்திருக்கிற இந்த வரத்தை இன்றே வெளிப்படுத்து. உன் வாழ்வின் திறனை வெளிப்படுத்து!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!