தேவனுடைய படைப்பாற்றல் உனக்குள் வைக்கப்பட்டுள்ளது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனுடைய படைப்பாற்றல் உனக்குள் வைக்கப்பட்டுள்ளது!

உனக்கு படைப்பாற்றல் தேவையா?

வேலை செய்வதில் புதிய யோசனைகள், இரவு உணவுக்கான புதிய யோசனைகள், உன் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கான புதிய யோசனைகள் ஆகியவற்றை எப்போதும் பெற்றிருப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

ஆனால் நான் உனக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டுவருகிறேன்!

உன் தேவன் மிகவும் படைப்பாற்றலுள்ளவர்! உண்மையில், அவர் படைப்பாற்றலில் வளங்குன்றாத ஊற்றாய் இருக்கிறார்.

ஆண்டவருடைய படைப்பாற்றலை எளிதில் தெரிந்துகொள்ள நம்மை சுற்றி பார்த்தால் போதும். இயற்கை முதல், நம் மூளை செயல்படும் விதம், நம் உணர்ச்சிகள் செயல்படும் விதம், பல்வேறு வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாம் திறமையாக செயல்படும் விதம், பல்வேறு வகையான தாவர உயிரினங்கள் வளரும் விதம், இந்த கிரகத்தில் வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அளவு, ஆயிரமாண்டு காலங்களாக, பூமியில் பிறக்கும் ஓவ்வொரு நபரும் தனித்துவமும் தனித்தன்மையும் பெற்றிருப்பது வரை… நம்மை சுற்றியுள்ளவைகளை கவனித்தால் போதும்!
நம்மைச் சுற்றியுள்ள இவை அனைத்தும் தேவனுடைய படைப்பாற்றலுக்கு சான்றாக இருக்கின்றன.

அவர் இந்தப் படைப்பாற்றலை உனக்குள் வைத்திருக்கிறார்!

மனிதர்கள் அசாத்தியமான படைப்பாற்றல் பெற்றவர்கள். சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் அதற்கு ஒரு உதாரணமாய் இருக்கிறது.

எனவே, உனக்குப் புதிய யோசனைகள் குறைவாக இருந்தாலோ, அல்லது தேவன் உனக்குள் வைத்துள்ள படைப்பாற்றலின் இந்த மூலப்பொருளை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினாலோ, உனக்கு உதவும்படி படைப்பாற்றலின் எஜமானரை அழை!

அடுத்த தொழில்நுட்பக் கருவியைக் கண்டுபிடிப்பதற்காகவோ அல்லது இன்று மாலையில் என்ன சமைக்க வேண்டும் என்பதை யோசிக்கவோ, உனக்குள் யோசனைகளை கொண்டுவர அவருக்குத் தெரியும். 😉

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!