தேவனுடைய தயவு உன் வாழ்நாள் முழுவதற்கும் உண்டு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனுடைய தயவு உன் வாழ்நாள் முழுவதற்கும் உண்டு!

தாவீது ராஜா தனது வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்தார், அதே சமயம் அவர் பயங்கரமான கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்தார். பல சமயங்களில், அவர் மரணத்திலிருந்து தப்பிக்க, தூர இடத்திற்கு ஓடிப்போய் தனிமையில் வாழ வேண்டியிருந்தது. அவருக்கு நெருக்கமானவர்களால் காட்டிக்கொடுக்கப்படுதல், துக்கத்தினால் புலம்புதல், எதிரிகளின் கடும் வெறுப்பு, மரண பயம்… ஆகிய இவற்றையெல்லாம் அவர் அனுபவித்தார்.

இவை எல்லாவற்றையும் அவர் சகித்துக்கொண்டபோதிலும், “… அவருடைய தயவோ நீடிய வாழ்வு” என்று சத்தமிட்டுச் சொல்கிறார். (வேதாகமத்தில் சங்கீதம் 30:5ஐப் பார்க்கவும்)

“வாழ்நாள் முழுவதும் நம் மீது அன்பு செலுத்தப்படும்” என்பதே இதன் அர்த்தமாகும்.

தேவனுடைய “கோபம் ஒரு நிமிஷம்” மாத்திரமே (சங்கீதம் 30:5). ஆனால் மறுபுறம், தேவன் தமது அன்பையும் இரக்கத்தையும் தம்முடைய பிள்ளைகளுக்கு அளவில்லாமல் அருள்கிறார் என்பதை தாவீது ராஜா நன்கு அறிந்திருந்தார்!

ஒருவேளை இந்நாட்களில் நீ பயங்கரமான போராட்டத்தை உன் வாழ்வில் சந்தித்துக்கொண்டிருக்கிறாயா?

இன்று, ஆண்டவரின் தயவை சந்தேகிக்க வேண்டாம் என்று நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். உன் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும்போது, அவர் உன் மீது வைத்துள்ள அன்பை ஒருபோதும் திரும்ப எடுத்துக்கொள்ளமாட்டார். அவர் உன் மீது இன்னும் அதிக அன்பை செலுத்துவார்! உனது போராட்டங்களுக்கு மத்தியில் அவருடைய தயவு நிலையானதும், நிபந்தனையற்றதும், நித்தியமானதுமாக இருக்கும்.

புயல் சீற்றத்துடன் எழலாம், ஆனால் அவை ஒரு இமைப்பொழுது மட்டுமே நிற்கும். உனக்கான தேவ தயவு உன் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பின்தொடர்ந்து வரும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!