தேவனுடைய ஆவியால் எல்லாம் ஆகும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனுடைய ஆவியால் எல்லாம் ஆகும்!

எனது இன்றைய செய்தியானது உன்னை சரீரப்பிரகாரமாகவும் மனதளவிலும் நன்றாக பெலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். என் நண்பனே/தோழியே, இது உனக்கான எனது ஜெபமாகும்.

சில சமயங்களில், நம் வாழ்க்கையில் நாம் போராட வேண்டிய கடுமையான போராட்டங்கள் இருக்கும்…

நாம் மேற்கொள்ளவேண்டிய துக்கம் அல்லது இழப்பு, உதாசீனம் பண்ணப்படுதல், நம் அன்புக்குரிய நபருடனான வேதனை நிறைந்த வாக்குவாதம் ஆகிய போராட்டங்கள் நமக்கு இருக்கலாம்…

ஆனால் இன்று, கர்த்தர் மீண்டும் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறார். அவர் தம்முடைய வார்த்தையில், “… பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் …” என்று கூறுகிறார். (சகரியா 4:6)

மனுஷீக வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இந்த சோதனை கடக்கமுடியாத ஒன்றாகத் தோன்றுகிறது: ஆனால் நீ தனியாக இல்லை. அவருடைய ஆவியால் நீ இதைக் கடந்து செல்வாய்! அவருடைய ஆவியால் நீ மேற்கொண்டு ஜெயமெடுப்பாய்!

ஆண்டவரின் வல்லமையினால், உன்னில் உள்ள அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இன்று நீ தொடர்ந்து முன்னேறிச் செல்வாய்! ஆம், அவருடைய ஆவியால், மிக உயரமான மலைகள் கூட தாழ இறங்கும், இருண்ட பள்ளத்தாக்குகளும் கூட ஒளியில் நிரம்பும்.

இன்று நான் அதை விசுவாசிக்கிறேன்; அது உன் வாழ்வில் நடக்கும் என்று அறிக்கையிடுகிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!