தேவனுடைய அன்பிற்கு எல்லையில்லை!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனுடைய அன்பிற்கு எல்லையில்லை!

“மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்,” (வேதாகமத்தில் ரோமர் 8:38-39ஐப் பார்க்கவும்)

என் நண்பனே/தோழியே, தேவனை உன் பிதாவாகக் கொண்டிருப்பதும், அவருடைய குடும்பத்தின் ஒரு பங்காளராக இருப்பதும் உனக்கு பாக்கியமான ஒரு விஷயமாகும். இது நீ அனுபவிக்கும் மிகவும் ஆச்சரியமானதும், மகத்தானதும், மற்றும் அற்புதமானதுமான ஒரு வரமாகும். அல்பாவும் ஒமேகாவுமாக இருப்பவரே உன் மீது எல்லையற்ற அன்பு கொண்டவராய் இருக்கிறார்.

உண்மையிலேயே, அவர் உன் அருகில் இருக்கிறார். ஆம், உன் தவறுகள் மற்றும் தோல்விகள் மத்தியிலும் அவர் உன்னை நேசிக்கிறார். தேவன் ஒருபோதும் மாற மாட்டார். அவரால் ஒருபோதும் உன்னைக் கைவிட முடியாது. மற்றவர்கள் உன்னைக் கைவிடும்போது, அவர் உன்னை விட்டு விலகிச்செல்வதில்லை, உன்னைக் கைவிடவும் மாட்டார். அவர் உனக்காக இருக்கிறார். அவருடைய கரங்கள் உனக்காக விரிவாய் நீட்டப்பட்டிருக்கிறது, உன் நிமித்தமாக அவருடைய இருதயம் களிகூருகிறது.

உன் வாழ்க்கையில் நீ நினைத்துப் பார்க்கக்கூடிய எதையும் விட அதிகமாகவும், உயர்வாகவும் உன்னை அவர் பார்க்கிறார். அவருடைய திட்டம் மிகவும் பெரியது. அவருடைய வழிகள் சிறந்தவை. அவரை விசுவாசி. அவர் உன்னைத் தொடுவாராக, உன்னை நிரப்புவாராக, தம்முடைய அன்பினால் உன்னை நிரம்பிவழியச் செய்வாராக!

என்னுடன் சேர்ந்து அறிக்கையிடு: “பிதாவே, மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நான் விசுவாசிக்கிறேன்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!