தேவனில் நம்பிக்கை
முகப்பு ›› அற்புதங்கள் ››
“இது முதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.” (வேதாகமத்தில் சங்கீதம் 131:3 ஐ வாசிக்கவும்)
இன்று கருத்தில்கொள்ள வேண்டிய ஒரு சிந்தனை… சில சமயங்களில், நம் பணம், வேலை, வாழ்க்கைத் துணை போன்றவற்றில் கண்ணுக்குத் தெரியும் அல்லது நம்பகமான உணர்வைத் தருகிற “ஏதாவது ஒன்றின் மீது” நம்பிக்கை வைத்துவிட நாம் அனைவரும் தூண்டப்படுகிறோம் அல்லவா?
தேவன் ஒரு நிச்சயமான புகலிடமாய் இருக்கிறார். அவர் “கன்மலையானவர்”. அவர் அசைக்கப்படுவதில்லை தள்ளாடுவதும் இல்லை; அவர் நிலையற்றவர் அல்ல. அவர் மாறாதவராய் இருக்கிறார்.
ஆண்டவர் தான்…
- உனக்கு ஆறுதல் அளிக்கிறார்
- உன்னைப் பாதுகாக்கிறார்
- உன்னை உயர்த்துகிறார்
- உன்னை மீட்டெடுக்கிறார்
- மேலும் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார்.
உன் திறமைகளின் மீதோ அல்லது உன்னை இரட்சிக்கவோ அல்லது ஆறுதல்படுத்தவோ முடியாத இந்த உலக அமைப்புகளின் மீதோ நம்பிக்கை வைக்க அல்ல… உன் நம்பிக்கையையும் உறுதியையும் கர்த்தர் மீது வைக்க, அவருடைய வார்த்தையானவர் உன்னை அழைக்கிறார்.
தேவனை உன் கன்மலையாகவும் கோட்டையாகவும் கொண்டிருப்பது உன் பாக்கியம். உன் நம்பிக்கையை முழுமையாக அவர் மீது வைத்து, அவருடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்!
என்னுடன் சேர்ந்து ஜெபி: “ஆண்டவரே, நான் இன்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்கிறேன். என் மீதோ அல்லது இந்த உலகின் எந்த அமைப்புகளின் மீதோ நான் என் நம்பிக்கையையும் உறுதியையும் வைப்பதற்கும் பதிலாக உம் மீது மட்டுமே என் நம்பிக்கையையும் உறுதியையும் வைக்கிறேன். நீரே என் கன்மலையும் கோட்டையுமாய் இருக்கிறீர்! ஆமென்.”