தேவனிடத்தில் உன் வேலையைக் குறித்த திட்டம் இருக்கிறதா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› தேவனிடத்தில் உன் வேலையைக் குறித்த திட்டம் இருக்கிறதா?

அப்போஸ்தலராகிய பவுல், முதல் திருச்சபையின் ஊழியக்காரனாய் இருந்தார், முன்னர் கமாலியேல் என்பவரின் கீழ் கல்வி கற்றார், இந்த கமாலியேல் என்பவர் நியாயப்பிரமாணம் கற்பிக்கிறபடி அவனுக்குப் போதித்த ஒரு போதக ஆசிரியர் ஆவார். (வேதாகமத்தில் அப்போஸ்தலர் 22:3ஐப் பார்க்கவும்)

பவுல் தனது காலத்தின் சிறந்த ஆசிரியர்களில் ஒருவரால் பயிற்றுவிக்கப்பட்டு கல்வி கற்றிருந்தாலும் கூட, கூடாரம் செய்யும் தொழிலையும் அவர் கற்றுக்கொண்டார்!

உண்மையில், அக்கால ரபிவழி நடைமுறையின்படி, வேதபண்டிதர்கள் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. வேறொருவரைச் சார்ந்திருக்காமல் தனது உணவைத் தானே சம்பாதிக்கும்படி உழைப்பதில் பவுல் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக நிருபங்கள் நமக்குக் கூறுகின்றன. எல்லா இடங்களிலும் ஊழியம் செய்ய இயலும்படி பவுலுக்கு தேவன் இந்தப் பணியைக் கொடுத்திருந்தார்!

இதை நான் ஏன் உன்னுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? உன் தொழிலுக்கான வாய்ப்பின் ஒரு கதவு மூடப்பட்டால், சோர்வடைந்துவிட வேண்டாம், ஏனென்றால் தேவன் வேறு ஒரு கதவைத் திறப்பார்! அதை உனக்கு வழங்குபவரும், அதற்காக உன்னைத் தகுதிப்படுத்துபவரும் அவரே. சூழ்நிலைகள் மாறினாலும், எதிர்ப்புகள் இருந்தாலும், நீ சோர்ந்து போகாதே. தேவன் உனக்கான ஒன்றை வைத்திருக்கிறார், அது உனக்குப் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவரைக் கனம்பண்ண உனக்கு உதவும். விசுவாசத்தின் மீது நம்பிக்கை வை… தேவன் ஒரு புதிய கதவைத் திறக்கப் போகிறார்!

பின்வரும் சாட்சிகள் உன்னை ஊக்குவிக்கும் என்று நான் நம்பிக்கையோடு ஜெபிக்கிறேன்…

“சகோதரர் எரிக், நான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி ஊக்க மின்னஞ்சலைப் பெற்றுவருகிறேன், உண்மையில் சொல்ல வேண்டுமானால், இது நிஜமாகவே தேவன் என்னிடம் நேரடியாகப் பேசுவதைப்போல இருக்கிறது. நான் கேட்க விரும்பும் சரியான செய்தியை சரியான நேரத்தில் மின்னஞ்சல்கள் கொண்டுவருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு, நான் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டேன். அந்த வேலை எனக்கு உண்மையிலேயே பிடித்திருந்தது, ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எப்போதும் வெற்றிகளாலும் எளிதான நேரங்களாலும் நிறைந்தவை அல்ல என்று ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல் மூலம் தேவன் என்னிடம் பேசினார். இதை வாசித்தபோது எனக்கு அந்த வேலை கிடைக்கவில்லை என்றால், அது என்னைக் குறித்த தேவனுடைய சித்தம் என்பதை நான் புரிந்துகொள்ளவேண்டும் என்று இருந்தேன். அந்தநாளின் இறுதியில், நான் வெற்றிபெறவில்லை என்று எனக்குக் கடிதம் வந்தது; இருப்பினும், இதயத்தை உடைக்கும் இந்தத் தகவலைப் பெற என்னை முன்கூட்டியே ஆயத்தப்படுத்தியதற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருந்தேன். இன்னும் சொல்லப்போனால், இந்த வாழ்க்கையில் உங்கள் மூலமாக என்னை வழிநடத்தியதற்கு நான் உண்மையிலேயே தேவனுக்கு நன்றி கூறுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.” எஸ்தர்

“சந்தேகத்துடனும் கவலையுடனும் இருமனதோடு தடுமாறிக்கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவளாய் இருப்பதை விட்டுவிட்டு, நான் உண்மையாக தேவனைப் பின்பற்றுபவளாக மாறினேன்! நான் அப்படித்தான் இருந்தேன். நான் ஒரு விளம்பரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கி 13 வருடங்கள் ஆகிறது. நான் உண்மையில் சொல்ல வேண்டுமானால், இது நான் விரும்பிய வேலை அல்ல என்பதால் கோபமும் விரக்தியும் நிறைந்தவளாக இருந்தேன். இருப்பினும், ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி ஊக்க மின்னஞ்சலுக்கு நான் பதிவு செய்ததிலிருந்து, தேவன் தினமும் என்னிடம் பேசி, விசுவாசத்தோடு கேட்கவும், நான் ஏற்கனவே அதைப் பெற்றுக்கொண்டேன் என்று நம்பவும் கற்றுக்கொடுத்து வருகிறார். எனது சாமர்த்தியங்கள் / திறமைகள் மற்றும் ஆர்வங்களை நன்கு புரிந்துகொள்ளவும், அவரது சித்தத்திற்கு இடமளிக்கவும் அதே நேரத்தில் எனது கனவுகளின்படியே தொடர்ந்து முன்னோக்கி செல்லவும் அவர் எனக்கு அறிவூட்டினார். கிறிஸ்துவின் குரலைக் கேட்கவும், இறுதியில் தேவன் நம்மை எதற்காக சிருஷ்டித்தார் என்பதை அறிந்து, அதை நிறைவேற்றும்படி வாழவும் நாம் கிறிஸ்துவில் வேரூன்றினவர்களாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நாம் கேட்பதை விடவும் அல்லது கற்பனை செய்வதை விடவும் அவரால் அதிகமாகச் செய்ய முடியும். ஆஷா

உன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்குமான ஒரு திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார் என்பதை நம்பு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!