தீமைக்கு ஏதுவானதை, தேவன் நன்மைக்கு ஏதுவானதாக மாற்றுகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› தீமைக்கு ஏதுவானதை, தேவன் நன்மைக்கு ஏதுவானதாக மாற்றுகிறார்!

சமீபத்தில் எனக்கு ஒரு நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது, பிரான்சில் உள்ள எங்கள் ஊழியத்தை அழிப்பதே அது முதல், அவளுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்று சொல்லி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது! இந்த நபரை எனக்குத் தெரியாது, அவள், தான் ஒரு கிறிஸ்தவள் என்றும், இந்தச் செயல்பாட்டில் தனக்கு உதவுமாறு ஆண்டவரிடம் கேட்டிருப்பதாகவும் கூறியிருந்தாள்.

உண்மையிலேயே இது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது, ஆனால் எதிர்மறையாக நடந்துகொள்வதற்குப் பதிலாக, தேவன் அதை நன்மைக்கு ஏதுவாகப் பயன்படுத்துவதை நான் தெரிந்துகொண்டேன்! இது எப்படி சாத்தியமாகும்?

  • நான் இந்த நபரை ஆசீர்வதித்தேன். நம்மை சபித்து துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிக்கும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். (வேதாகமத்தில் மத்தேயு 5:44ஐப் பார்க்கவும்) “ஆண்டவரே, அவளுடைய வாழ்க்கையைத் தொடுவீராக! அவளுக்கு நீர் தேவை” என்று நான் ஜெபித்தேன்.
  • துன்புறுத்தலுக்கு ஆளான அனைவரையும் நான் நினைத்தேன், மற்றும் அவர்களை எப்படி உற்சாகப்படுத்துவது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்! ஒரு நபர் உங்களைக் குறி வைப்பது என்பது, எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் அல்ல, உங்களுக்கு அப்படி நேர்ந்தால், உலகத்தில் இருப்பவரை விட உங்களில் இருப்பவர் பெரியவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (வேதாகமத்தில் 1 யோவான் 4:4ஐப் பார்க்கவும்)
  • உன்னை ஊக்குவிப்பதற்காகவே இதைப் பற்றி எழுத நான் முடிவு செய்தேன்… இந்தச் சூழ்நிலையை தேவன் நன்மைக்கு ஏதுவாக பயன்படுத்துவதற்கான மற்றொரு வழிதான் இது! ஒரு நபர் எனக்கு அநீதி இழைத்தார், அதற்குப் பதிலாக நான் அநேகரை ஆசீர்வதிக்கப் போகிறேன். நிச்சயமாக, பிசாசு நினைத்தது ஒருபோதும் நடக்காது!
  • ஆண்டவரிடத்தில் ஜெபிப்பதும் அவரை ஆராதிப்பதும் எதிரியின் திட்டங்களைத் தலைகீழாக மாற்றுவதற்கான ஒரு அற்புதமான வழியாகும். “கர்த்தாவே, உம்மைத் துதிக்கிறேன்! நீர் இந்தச் சோதனையை என் வாழ்வில் அனுமதித்தீர்… நீர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறீர். தீமைக்கு ஏதுவானதை நன்மையாக மாற்றுகிறவர் நீரே! உம் மீது நான் விசுவாசம் வைத்திருக்கிறேன். (வேதாகமத்தில் பிலிப்பியர் 4:6 ஐப் பார்க்கவும்)

இதை வாசித்ததினிமித்தம், நீங்கள் ஜெபித்து, தேவனால் தீமையை எவ்வாறு நன்மையாக மாற்ற முடியும் என்பதைக் கண்டறிய இன்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஏனென்றால் தேவன் உங்களுக்குச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறார் – என்பது நிச்சயம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!