திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஆண்டவர் உன்னை அனுமதிக்க மாட்டார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஆண்டவர் உன்னை அனுமதிக்க மாட்டார்!

வேதாகமத்தில் 1கொரிந்தியர் 10:13ல் இப்படியாக சொல்லப்பட்டுள்ளது. “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.”

என் நண்பர் பாபி அவர்கள் செய்த ஆராய்ச்சியின்படி, 1 கொரிந்தியர் 10:13ம் வசனமே சீன கிறிஸ்தவர்களின் விருப்பமான வேத வசனம் ஆகும். பல இடங்களில் இருப்பதைப் போலவே, சீனாவிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இன்னும் பாகுபாடும் துன்புறுத்தலும் இருக்கின்றன. 2010ல் ஒரு உலகளாவிய மாநாட்டிற்காக நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, நான் காணாத ஒரே பிரதிநிதிகள் குழு சீனப் பிரதிநிதிகள் குழு மட்டும்தான் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் அனைவரும் அந்த மாநாட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது! மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வசனம் ஏன் சீன கிறிஸ்தவர்களின் விருப்பமான வசனம் என்பதை நாம் பார்க்கலாம்…‌ சீனாவில் கிறிஸ்தவராக வாழ்வது அவ்வளவு எளிதல்ல. சில நாட்களில் கிறிஸ்தவராக இருப்பது உனக்கும் கூட அவ்வளவு எளிதானதாக இல்லாமல் போகலாம். உனது விசுவாசத்தை விரும்பாத ஒருவரிடமிருந்து பாடுகள் வரலாம் அல்லது நீ கடந்த காலத்தில் அனுபவித்த சோதனையின் வாயிலாகவும் வரக்கூடும்…

இருப்பினும், இந்த வசனத்தில் ஒரு வாக்குத்தத்தம் உள்ளது, அதுதான் இது: ஆண்டவர் உண்மையுள்ளவர்! உன்னால் முடிந்ததைவிடவும் நீ சோதிக்கப்படவோ அல்லது பரீட்சிக்கப்படவோ அவர் அனுமதிக்க மாட்டார். தப்பிப்பதற்கான வழியை அவர் ஏற்கனவே ஆயத்தப்படுத்திவிட்டார். அவர் உன்னை அதிலிருந்து விடுவிக்கப் போகிறார்! அதை விசுவாசி, இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொள்.

என்னுடன் சேர்ந்து அறிக்கையிடு: “ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்! என்னால் முடிந்ததை விட நீர் என்னை சோதிக்க விடமாட்டீர். உமது வார்த்தை உண்மையானது, என்ன வந்தாலும் உமது வாக்குத்தத்தங்களை நான் விடமாட்டேன். நான் அதை அறிக்கை செய்கிறேன்…எல்லாவற்றிலும் நான் உம்மை நம்புகிறேன்! இயேசுவின் நாமத்தில், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!