தங்கம், தூபவர்க்கம் மற்றும் வெள்ளைப்போளம் 🎁
முகப்பு ›› அற்புதங்கள் ››
இயேசு பிறந்த பிறகு மூன்று சாஸ்திரிகள் அவருக்கு பொக்கிஷங்களை கொண்டு வந்தனர். பாரம்பரியமாக அவர்கள் தொழுவ காட்சியில் சேர்க்கப்பட்டாலும், அவர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைவதை பைபிள் தெளிவாக விவரிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆஹா, உண்மை எப்போதும் ஐதீகங்களை வெல்லும் என்று நினைக்கிறேன். “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.” (மத்தேயு 2:11)
அவர்கள் தங்கள் பரிசுகளை எப்போது கொண்டுவந்திருந்தாலும், இந்தக் கதையில் காணப்படும் அடையாளத்தையும் உண்மையின் ஆழத்தையும் நம்மால் விரும்பாமல் இருக்க முடியாது. இவர்கள் வரவிருக்கும் ஒரு மேசியா பிறக்கப்போகிறார் என்ற திருவெளிப்பாட்டை கொண்ட ஞானிகள். இவர்கள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஒரு குழந்தையை வணங்கினர். இந்த கதை நம்பமுடியாததைப் போல் தோன்றலாம், ஆனால் பழங்கால பாரம்பரியம் இந்த மூவரையும் பெயரிடுகிறது: மெல்கியோர், கஸ்பார் மற்றும் பல்தாசார்.
நீங்கள் எப்போதாவது இயேசுவைத் தேடியிருக்கிறீர்களா? உங்களுக்கு அர்த்தமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் எப்போதாவது அவரிடம் கொண்டு வந்திருக்கிறீர்களா? ஒருமுறை யாரோ ஒருவர் சொன்னார், “ஞானிகள் இன்னும் அவரைத் தேடுகிறார்கள்.” ஆம், ஞானிகள் (அல்லது சாஸ்திரிகள்) இன்னும் அவரைத் தேடி அவருக்கு பரிசுகளை வழங்குகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் எப்போதாவது உங்கள் பிறவிக் கொடைகளையும் திறமைகளையும் ஆண்டவருக்கு கொடுத்திருக்கிறீர்களா?
ஆண்டவர் உங்கள் அனைத்தையும் விரும்புகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ஞானிகள் தங்கள் பரிசுகளுடன் ஆண்டவரை வணங்க தயாராக வந்தனர். ஒரு ராஜாவுக்கு ஏற்ற பரிசுகளை அவர்கள் கொண்டு வந்தார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த வருடம் நீங்கள் இயேசுவுக்கு என்ன கொடுப்பீர்கள்? உங்கள் முழுவதையும் (உங்களையே) அவருக்கு வழங்க நீங்கள் உணர்வோடு தேர்ந்து கொள்வீர்களா? அதிகாலையில் உம் திருமுகம் தேடி (ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் Fr. S. J. Berchmans) என்ற பாடலின் வரிகள் என் காதுகளில் இப்போது ஒலிக்கின்றன. “உமக்குகந்த தூயபலியாய் இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன், ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும்..” இந்த பாடலே இப்போது என் ஜெபமாக இருக்கிறது. இது உங்களுடையதாகவும் மாறுமா? இயேசுவிடம் ஒரு சிறிய ஜெபம் செய்தால் போதும்.
ஏனென்றால் அப்படித்தான் நீங்கள் ஒரு அற்புதமாக மாறமுடியும்.