ஜெபத்தில் நீ நேர்மையாக இருக்க முடியுமா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஜெபத்தில் நீ நேர்மையாக இருக்க முடியுமா?

நம் ஜெபங்கள் ஆண்டவரை புண்படுத்தாமல் இருப்பது நல்லதா அல்லது நம் உண்மையான உணர்ச்சிகளை அடக்கிவைக்காமல் வெளிப்படுத்துவது நல்லதா?

இது ஒரு தீவிரமான கேள்வி, ஏனென்றால் நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் அனைவருக்கும் ஆண்டவரின் மீது மிகுந்த மரியாதையும் தெய்வ பயமும் உண்டு. எப்படியிருந்தாலும், இதுவே நாம் நம்புவது.

நீ என்ன நினைக்கிறாய்?

ஆண்டவரிடம் நேர்மையாக இருக்க முடியாமல் நான் மிகவும் போராடியிருக்கிறேன். அவருடைய அங்கீகாரத்தை சம்பாதிக்க, என் இருளான பல எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் நான் ஆண்டவரிடம் பகிராமல் புறக்கணித்திருக்கிறேன். இந்த சுபாவம் என் அப்பாவிடம் எனக்கிருந்த உறவிலிருந்து பரிமாற்றமானது என்று நான் நினைக்கிறன். ஒரு சிறுவனாக இருந்தபோது, என் தந்தையை மகிழ்விக்க நான் திறமையுடன் செயல்படவேண்டுமென்று நான் நினைத்ததுண்டு.

அப்போஸ்தலனான பவுல் இதைப்பற்றி 1 கொரிந்தியர் 13:11ல் பேசியிருக்கிறார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” இதில் எனக்கு இந்த பகுதி பிடித்திருந்தது “நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.”

ஆண்டவர் என் பூலோகத் தந்தையைப் போல் சிந்திப்பார் என்று நான் நினைத்தது சிறுபிள்ளைத்தனமானது என்று புரிந்துகொண்டேன். உண்மையில்லாத, மொத்தத்தில் நேர்மையில்லாத, பக்தியான ஜெபங்களை ஏறெடுக்க வேண்டுமென்று நான் சிந்தித்தது முட்டாள்தனமானது என்று உணர்ந்தேன்.

ஆண்டவர் உன்னை எல்லையின்றி நேசிக்கிறார். நாம் ஜெபத்தில் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லலாம் ஏனென்றால் அவர் ஏற்கனவே நம்மை அறிந்திருக்கிறார், இருந்தும் நம்மை நேசிக்கிறார்.

தாவீது ராஜாவின் சங்கீதங்கள் இதைத் துல்லியமாக விளக்குகின்றன. தன் எதிரிகளை தண்டிக்கும்படியும், அவர்கள் செய்ததற்கு தக்கதாக பதிலடி கொடுக்கும்படியும் தாவீது ராஜா ஆண்டவரை கேட்கிறார். ஒரு வெளிப்படையான சங்கீதத்தில் தன் பாவங்களை அவர் அறிக்கையிடுகிறார், மற்றும் அவருடைய கடந்த கால தோல்விகளினால் ஏற்பட்ட அவமானத்தை வெளிப்படுத்துகிறார். ஆண்டவருடைய எல்லையில்லா அன்பை தாவீது புரிந்துகொண்டார்.

நம் ஜெபங்கள் நாம் 100% பாதுகாப்பாக உணரும் இடமாக இருக்கவேண்டும். நாம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதினால் அவர் நம்மை தீர்ப்பிடவோ தண்டிக்கவோ மாட்டார்.

நம் அனைவருக்கு நம்மை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு பாதுகாப்பான இடம் தேவை. அந்த இடத்தை நீ ஜெபத்தில் காண்கிறாய் என்று நான் நம்புகிறேன்.

அற்புதங்கள் உண்மை என்பதையும், நீ ஒரு அற்புதம் என்பதையும் மறந்துவிடாதே.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!