ஜெபத்தின் வல்லமையை நீ கண்டறிந்தாயா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஜெபத்தின் வல்லமையை நீ கண்டறிந்தாயா?

உலகிலேயே சரியாக புரிந்துக்கொள்ளப்படாத ஒரு சக்தி ஜெபமாக இருக்குமோ?

ஜெபத்தின் வல்லமையை பற்றிய ஒரு வாக்குத்தத்ததை நான் பிலிப்பியர் 4:6ல் கண்டுபிடித்தேன் : “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல்…”. அப்போஸ்தலனான பவுல், கவலைக்கு மிகவும் எளிமையான, செலவில்லாத ஒரு மருந்தை பரிந்துரைக்கிறார். கவலையினால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், போதை பொருட்களை பயன்படுத்துவோர் அல்லது மருந்துகளை சாப்பிடும் கொடிக்கணக்கானோரை நாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கவலை என்பது உலகளவிலான தொற்றுநோயாக மாறிவிட்டது, இதற்கான ஒரே பதில் ஜெபம்தான். ஏதோ ஒரு ஜெபம் அல்ல, மாறாக ஆண்டவரிடம் ஜெபிப்பது.

நீ கவலைப்படுவது உண்டா? அதனுடைய விளைவுகளை எப்படி சமாளிக்கிறாய்?

ஜெபம் என்பது அழகான, தேர்ந்தேடுக்கப்பட்ட வார்த்தைகளால் ஆனது அல்ல, மாறாக “உன் கோரிக்கைகளை ஆண்டவரிடம் சொல்” (பிலிப்பியர் 4:6) என்ற எளிமையான ஒன்று என்பதை நீ உணர்ந்திருப்பாய் என்று நான் நம்புகிறேன்.

ஜெபங்கள் மதத் தலைவர்களால் மட்டுமே எழுதப்பட்ட ஒரு பாரம்பரியமான மதத்தின் கீழ் நான் வளர்ந்தேன். ஒரு சபையாக, நாங்கள் அனைவரும் அந்த ஜெபங்களை ஒன்றாக சொல்வோம். இந்த வழக்கத்தை நான் குறைகூறவில்லை, ஆனால் இது எனக்கு பிரயோஜனமான ஒன்றாக இல்லை. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுடன் ஒரு தனிப்பட்ட உறவில் இருக்க நான் தொடங்கியதுமுதல், என் ஜெபங்கள் மேலும் தன்னிச்சையானது. அது சொற்பொழிவுடனோ, அழகான வரிகளுடனோ இருக்கவில்லை ஆனால் மிகவும் தனிப்படையானதாக, நெருக்கமானதாக மாறியது.

உன்னுடைய ஜெபங்கள் தனிப்படையானதா?

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது தோழிக்காக ஜெபிக்கும்படி என் தாய் என்னிடம் கேட்ட அந்த நாளை நான் மறக்கமாட்டேன். என்னுடைய ஆச்சரியத்திற்கேற்ப, ஒரு வாரம் போல் கழிந்த பின், நான் என் வாகனத்தை கழுவிக்கொண்டிருக்கையில் என் தாய் குதூகலத்துடன் ஆர்ப்பரித்து கத்தினார்: “அவள் கேன்சர் நோயிலிருந்து குணமானாள், பவுல்!” என்று.

உன்னுடைய ஜெபங்கள் நெருக்கமும் வல்லமையும் நிறைந்ததா?

என் ஜெபங்கள், நெருக்கமும் வல்லமையும் நிறைந்ததென்று அன்று நான் கண்டுகொண்டேன். ஜெபம் ஒரு மதம் சார்ந்த வேலையாக இல்லாமல் ஒரு வாய்ப்பாக மாறியது.

அடுத்து வரும் நாட்களில் நீ ஜெபத்தின் வல்லமையை கண்டுகொள்ள உனக்கு உதவ வேண்டும் என்று நான் ஆண்டவரிடம் கேட்கிறேன். ஒருமுறை அதை நீ அனுபவித்தால், நீ இனி ஒருபோதும் வலுவிழந்து இருக்கமாட்டாய். இது உனக்கு ஒரு ஊக்கமாக இருக்குமென்று நான் விசுவாசிக்கிறேன். ஜெபம் என்பது உதவிக்காக விரக்தியடைந்து கெஞ்சும் வேண்டல் அல்ல, மாறாக பல வாழ்வுகளை மாற்றக்கூடிய ஒரு வல்லமையான விசை.

இப்படித்தான் நீ அற்புதங்களை பகிரும் ஒரு கருவியாக மாற முடியும்.

நீ ஒரு அற்புதம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!