ஜீவனை… மெய்யான ஜீவனைப் பெற்றுக்கொள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஜீவனை… மெய்யான ஜீவனைப் பெற்றுக்கொள்!

“ஜீவனின் ஆதாரமாக இருப்பவரிடமிருந்து ஜீவனைப் பெற்றுக்கொள்!”

இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் உள்ளத்தின் ஆழத்தில் சமாதானத்தையும், சமநிலையான பரிபூரண வாழ்க்கையையும் எல்லா நேரங்களிலும் தேடுகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆண்டவர் வேதாகமத்தில் இந்தப் பரிபூரணமான வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்.

“ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” (சங்கீதம் 16:11)

தேவன் உனக்கு ஜீவனை அளிப்பவராய் இருக்கிறார்; அவரால் மட்டுமே அதை உனக்கு வழங்க முடியும்! ஜீவன் பரிபூரணமாகப் பெருக வேண்டுமெனில், எல்லா ஜீவன்களுக்கும் ஆதாரமாக இருப்பவருடன் நேரத்தைச் செலவிடு! உன் பரலோகப் பிதாவுடன், உன்னை சிருஷ்டித்தவருடன், மற்ற எவரையும் விட உன்னை நன்கு அறிந்தவருடன், எல்லையற்ற அன்புடன் உன்னை நேசிப்பவருடன் ஐக்கியம் கொண்டிரு.

நிரம்பி வழியும் அவரது ஜீவனைப் பெற்றுக்கொள். அவர் தம்முடைய பிரசன்னத்திற்குள் வருமாறு உன்னை அழைக்கிறார். உன் உள்ளான வாழ்வை வடிவமைக்கவும் மாற்றியமைக்கவும் நீ அவருக்கு இடங்கொடு. அவர் எல்லா சந்தோஷத்துக்கும் காரணராக இருக்கிறார், அவர் கொடுக்கும் சந்தோஷம் பூரணமானது. (ரோமர் 15:13) அவர் எல்லா சமாதானத்துக்கும் மூலக்காரணராய் இருக்கிறார், அவர் தரும் சமாதானம் எல்லாப் புரிதலுக்கும் மேலானது. (பிலிப்பியர் 4:7)

ஆம், ஆண்டவர் உன் வாழ்வில் உண்மையிலேயே ஜீவனை வைக்க இடங்கொடு… உள்ளான இருதயத்திலும் முழுமையாகவும் புதிதாக்கப்படுவாயாக!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!