சோதனையில், ஆம்… ஆனால் இயேசுவுடன்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› சோதனையில், ஆம்… ஆனால் இயேசுவுடன்!

நாம் ஆண்டவருக்குள் நெருக்கமும் வளர்ச்சியும் அனுபவிக்கும்போது அவரிடம் இன்னும் அதிகமாக நம்மை வெளிப்படையாக்கிக்கொள்வது மிக முக்கியமானது. அதனால், நம்முடைய சந்தோஷங்களையும் வெற்றிகளையும் மட்டுமல்லாமல் போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் கூட அவரிடம் பகிர்ந்துகொள்ள முடியும். நாம் அப்படி செய்யும்போது, ​​அவருடைய வார்த்தை, அவருடைய அன்பு மற்றும் அவருடைய ஞானத்தால் மீண்டும் திடப்படுத்தப்படுகிறோம் மற்றும் ஆறுதல் அடைகிறோம்.

யாக்கோபு 1: 2-4 இப்படியாகக் கூறுகிறது, “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.”

நீங்கள் எப்படிப்பட்ட சோதனையை சந்திக்கிறீர்கள்,

  • நீங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கின் வழியாக சென்றுகொண்டிருக்கிறீர்களா?
  • முயற்சியை கைவிட நினைக்கிறீர்களா?
  • உங்களால் இது இயலாது என்று நினைக்கிறீர்களா?
  • பெரிய இழப்பு அல்லது துன்பத்தின் நடுவில் இருக்கிறீர்களா?
  • பயந்துபோயிருக்கிறீர்களா?

இதைப் போன்ற சூழ்நிலைகளில் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: உங்கள் கண்களை அவர் மீது வைத்திருங்கள்! ஒருவேளை இதை நீங்கள் முன்பே அறிந்திருக்கலாம், ஆனால் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது மிகவும் நல்லது ஏன்னென்றால் இதுதான் உண்மை… நமக்கு ஆறுதல் அளிக்கும் மற்றும் நம்மை விடுவிக்கும் ஒரு பலமான உண்மையாகும்.

ஆம், நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். உங்கள் பாதையில் சிதறியிருக்கும் புயல்களின் மத்தியில், அவர் உங்கள் கரங்களைப் பிடிப்பது மட்டுமல்லாமல், தனது திட்டங்களையும் நிறைவேற்றுகிறார். அவர் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துகிறார். அது, அன்பரே, ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.

சந்தேகப்பட வேண்டாம்… உறுதியாக இருங்கள்! உங்கள் கண்களை இயேசுவின் மீது வைத்து, அவரில் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்… உங்கள் சந்தேகத்தை விட்டுவிடுங்கள்!

இந்த நாளில், ஆசீர்வாதமாக இருங்கள், தைரியமாக இருங்கள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!