சூழ்நிலைகளுக்கு மேலாக உயர எழும்பும்படி நீ சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்…

முகப்பு ›› அற்புதங்கள் ›› சூழ்நிலைகளுக்கு மேலாக உயர எழும்பும்படி நீ சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்…

“அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (வேதாகமத்தில் சகரியா 4:6ஐப் பார்க்கவும்)

தகைவிலான் குருவி செட்டைகளை அடித்து வானத்தில் நேர்த்தியாகப் பறந்து செல்லும் எழில்மிகு காட்சியை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? இந்த சிறிய பறவை அதன் தீவிரமான பயணத்தின் போது கிட்டத்தட்ட 6,000 மைல்கள் தூரத்திற்குத் தொடர்ந்து பறக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? இந்த பயணத்திற்காக, இந்தப் பறவை, இயற்கையிலேயே உந்தப்பட்டு உள்ளுணர்வால் வழிநடத்தப்படுகிறது.

நீயும் மேல் நோக்கிப் பறக்கும்படி மேம்படுத்தப்பட்டிருக்கிறாய். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், சூழ்நிலைகளுக்கு மேலாக உயரும் வகையில் நீ உருவாக்கப்பட்டுள்ளாய், உன் வாழ்வு காற்றில் செட்டைகளை அடித்து எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

உண்மையிலேயே, அவருடைய ஆவியினால்…

  • நீ அசாதாரணமான விஷயங்களை சாதிக்கிறாய்.
  • நீ பெரும் சாதனைகளைச் செய்கிறாய்.
  • காற்று உனக்கு எதிராக இருக்கும்போதும், முன்னேறிச் செல்லும் திறனைப் பெறுகிறாய்.

இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால், உன் சூழ்நிலைகளுக்கு மேலாக நீ எழும்பு!

என்னுடன் சேர்ந்து அறிக்கையிடு: “இயேசுவே, உம்மீது கொண்டிருக்கிற விசுவாசத்தால், நான் கழுகைப் போல செட்டைகளை அடித்து எழும்புகிறேன்! சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், உயர பறக்கும்படிக்கு நீர் என்னை ஆயத்தப்படுத்தியுள்ளீர். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, உமது ஆவியினால் எல்லாம் ஆகும், உமது நாமத்தினாலே நான் பெரிய காரியங்களைச் செய்வேன்! ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!