சுவாசம் மிகவும் முக்கியமானது… அதைப்போலவே ஜெபமும் முக்கியமானதுதான்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› சுவாசம் மிகவும் முக்கியமானது… அதைப்போலவே ஜெபமும் முக்கியமானதுதான்!

இன்று காலை நீ நல்ல ஆரோக்கியத்துடனும், ஆற்றலுடனும், உனது இந்த நாளையும் வரப்போகும் வாரத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளத் தயாராக உள்ளாய் என்று நம்புகிறேன்!

இன்று நீ சிந்தித்து, சீரமைக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்று எனக்குத் தெரியும். இருப்பினும், உனது செய்து முடிக்க வேண்டிய பட்டியலில் நீ எழுத மறந்துவிட்ட விஷயம் ஒன்று இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்; அதைச் செய்யாமல் உன்னால் வேறு எதையும் செய்ய முடியாது… அது வேறு எதுவுமில்லை… நீ சுவாசிப்பதே ஆகும்!

இந்த மிக முக்கியமான செயலைச் செய்ய உன் பங்கிலிருந்து நீ ஆழமாக சிந்தித்துத் தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை, அது தானாகவே நடக்கும். இருப்பினும், நீ தொடர்ந்து சுவாசிக்க வேண்டியது இயற்கையின் கட்டாயம். ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டிய சுவாச சுழற்சிகள் அவசியமாய் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு சுவாசத்தை பற்றியும் நீ சிந்திக்க வேண்டியதில்லை. நீ சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிடத் தேவையில்லை… நீ வெறுமனே சுவாசிக்கிறாய்.

இதேபோல், ஒரு சமநிலையான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஜெபம், தேவனுடன் சம்பாஷனை மற்றும் ஐக்கியம் ஆகியவை இன்றியமையாத ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஆண்டவருடன் பேசுவதற்கு அவருடைய ஆலோசனையையும் ஊக்கத்தையும் பெறுவதற்கு நேரம் ஒதுக்குவது அவசியம். ஒவ்வொரு நாள் காலையிலும், படுக்கையிலிருந்து எழும்புவதற்கு முன், நான் செய்வது இதைத்தான்… நான் என் எண்ணங்களை ஆண்டவருக்கு நேராய் திருப்பி… அவருடைய மகத்துவம், அவருடைய நன்மைகள், அவருடைய இரக்கம் மற்றும் அவருடைய அன்பு ஆகியவற்றை சிந்தித்துப் பார்க்கிறேன். நான் மூச்சை உள்ளிழுத்து பின் வெளியே விடுகிறேன். நான் அவருடைய ஜீவனைப் பெற்றுக்கொண்டு என்னுடையதை அவருக்குக் கொடுக்கிறேன்.

ஆண்டவருடனான தொடர்புதான் ஒவ்வொரு நாளும் உன்னை “ஜீவனோடு” வைத்திருக்க உதவும். இது முற்றிலும் இன்றியமையாதது. அதை ஒரு பழக்கமாக கொண்டிருப்பது மட்டுமல்லாமல்… அதை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற உன்னை அழைக்கிறேன். காலப்போக்கில், ஆண்டவருடன் பேசுவதும் அவருடைய ஆலோசனையைப் பெறுவதும் நீ மூச்சு விடுவதுபோல் இயல்பான ஒன்றாகிவிடும்!

“இயேசுவே என் சுவாசமே என் கண்களில் உம் வெளிச்சமே”
https://youtu.be/5UbOc_K_Kow?si=1H69v-6Bo44YFqTn என்ற இந்த அழகான பாடலைக் கேட்பதன் மூலம் நீ ஆண்டவரின் சமூகத்தில் சுவாசிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

நண்பனே/தோழியே, இந்த வாரம் உனக்கு ஆசீர்வாதமான வாரமாக அமையட்டும்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!