சிறப்பிலிருந்து மிகவும் சிறப்பானதற்கு கடந்து செல்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› சிறப்பிலிருந்து மிகவும் சிறப்பானதற்கு கடந்து செல்!

நீ குழந்தையாக இருந்தபோது, உன் பள்ளி மதிப்பெண் அறிக்கை அட்டையில் “இன்னும் சிறப்பாக செய்திருந்திருக்கலாம்” என்று உன் ஆசிரியரிடமிருந்து வந்த அறிக்கையை வாசித்திருக்கிறாயா? அந்த அறிக்கையானது ஒருவேளை உன்னை உற்சாகப்படுத்துவதாய் இல்லாமல் இருந்திருக்கலாம்… குறிப்பாக, நீ அதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருந்தால், அது உனக்கு வருத்தமளிப்பதாய் இருந்திருக்கும்.

ஆனால் இப்போது, “உன்னால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும், ஏனென்றால் நான் உன்னில் இருக்கிறேன்… நான் உனக்கு உதவுகிறேன்” என்று கர்த்தர் உன் காதில் மென்மையாக சொல்வதாக ஒரு கணம் என்னுடன் சேர்ந்து கற்பனை செய்து பார்! இப்போது அது உண்மையிலேயே உன்னை உற்சாகப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறதல்லவா?

வேதாகமத்தில் நீ பார்த்தாயானால், தேவன் உலகத்தை ஆறு கட்டங்களில் சிருஷ்டித்தார் என்று வாசிக்கிறோம். முதல் ஐந்து கட்டங்களில் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்த பிறகு, அது நன்றாயிருப்பதாக சொல்லித் தம்மைத்தாமே பாராட்டிக்கொண்டார். ஆறாவது நாளில் மனுஷனையும் மனுஷியையும் சிருஷ்டித்து முடித்தார்… அப்போதுதான் தேவன் அது மிகவும் நன்றாயிருப்பதாக கண்டார். ஆண்டவர் மற்ற நாட்களில் செய்ததை விட இவர்களை மிகவும் சிறப்பாகப் படைத்திருந்தார்!

“அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.”
வேதாகமத்தில் ஆதியாகமம் 1:31 ஐ வாசித்துப் பார்க்கவும்).

இப்போது, உன் அன்றாட சூழ்நிலைகளில், “இன்னும் நீ சிறப்பாக செய்யமுடியும்” என்று தேவன் உன்னிடம் சொல்வதாக கற்பனை செய்து பார்! வைராக்கியமும் மகிழ்ச்சியும் உன்னை நிரப்பி, கர்த்தருக்குள் இன்னும் அதிகமாக முன்னேறிச் செல்ல அது உன்னை உற்சாகப்படுத்துவதை நீ கற்பனை செய்து பார். அதிகமாக நேசி, அதிகமாகக் கொடு. அதிகமாக மன்னித்துவிடு.

“இது நன்றாக இருக்கிறது” என்று தேவன் உன்னைப் பாராட்டுவதைக் கேட்கும்படிக்கு, முதலாவது தேவனுக்காக இதைச் செய்ய விரும்பு. பின்பு உன் வாழ்வில் இது ஒரு பழக்கமாக மாறும், உன் வாழ்வில் இது ஒரு நல்ல பழக்கவழக்கமாகவே மாறிவிடும்.

ஆம், உன்னால் தொடர்ந்து முன்னேற முடியும், எல்லோரும்‌ பார்க்கும் வகையில் அது வெளிப்படையான முன்னேற்றமாக இருக்கும். ஆகவே, தொடர்ந்து உனது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மற்றும் உனது வேலையில் நீ சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் உற்சாகமளிக்கும் ஒரு நபராகவும் ஆசீர்வாதமாகவும் இரு. அவர்கள் தேவனுடைய அன்பால் தொடப்படுவார்கள், தேவனும் உன்னை பற்றிப் பெருமிதமடைவார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!