சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உனக்குத் தெரியுமா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உனக்குத் தெரியுமா?

வாழ்க்கை கடினமானது என்பதையும், சில சமயங்களில் நாம் சிரிக்கவோ அல்லது புன்னகைக்கவோ விரும்புவதில்லை என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் உறுதியாக நம்பு: ஆண்டவர் உன் அழுகையின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது (வேதாகமத்தில் சங்கீதம் 6:8ஐப் பார்க்கவும்)

இருப்பினும், கண்ணீரை ஆனந்தக் களிப்பாக மாற்றவும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக மகிழ்ச்சி எனும் துதியின் ஆடையைத் தரிப்பிக்கவும் ஆண்டவர் விரும்புகிறார் (வேதாகமத்தில் ஏசாயா 61:3ஐப் பார்க்கவும்)
“ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்.”

மகிழ்ச்சி என்பது, அதாவது இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் சிரிப்பு என்பது, வல்லமைவாய்ந்த பலன்களைக் கொண்டது என்பது உனக்குத் தெரியுமா?

ஆராய்ச்சியின் படி, சிரிப்பு என்பது:

  • மனச்சோர்வை மேற்கொள்ள உதவுகிறது.
  • வலியைக் குறைக்கிறது.
  • இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்கிறது.
  • இருதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நுரையீரலின் செயல்பாட்டைத் தூண்டுகிறது.
  • பதற்றமில்லாமல் இருக்க உதவுகிறது.
  • ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்துகிறது.
  • மனதிற்குள் அடக்கி வைத்திருக்கும் கோபத்தை விட்டுவிட உதவுகிறது.
  • நமது கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் வளரச் செய்கிறது.

மகிழ்ச்சியாய் இருப்பது உன் ஆரோக்கியத்திற்கு நல்லது!

அதை நமது நன்மைக்காகவும் நமது சந்தோஷத்திற்காகவும் ஆண்டவர் படைத்திருக்கிறார், எனவே அதை நம் வாழ்வில் வளரச் செய்யவும் அதிகரிக்கச் செய்யவும் தயங்க வேண்டாம்.

அதினால் கிடைக்கும் நன்மைகள் – நமக்கும் மற்றவர்களுக்கும் – மகத்தானவை!

ஒருமுறை ஒருவர், “நன்றாக சிரிப்பது நீண்ட நேரத்திற்கு உனக்கு நல்ல உணர்வைத் தரும்! மேலும் இது மற்றவர்களையும் மகிழவைக்கும். பிறர் சிரிக்கும்போது சிரிக்காமல் இருப்பது கடினம். உன்னை சிரிக்க வைப்பது எதுவாக இருந்தாலும், அதற்கு நேரம் ஒதுக்கு. அது உனக்கு நல்லது!” என்று சொன்னார்.

இயேசு உனக்குக் கொடுத்திருக்கிற வாழ்க்கை முழுமையாக வாழத் தகுதியானது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!