சற்றுநேரம் என்னுடன் அமர்ந்திரு
முகப்பு ›› அற்புதங்கள் ››
“ஒரு கணம் என்னுடன் அமர்ந்து என் சத்தத்தைக் கேள்.”
இன்று, சிறிது நேரம் ஒதுக்கி, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்று நான் விசுவாசிக்கும் இந்த வார்த்தைகளை வாசிக்குமாறு உன்னை அழைக்கிறேன். இந்த வார்த்தைகளால் உன் ஆவியும் ஆத்துமாவும் பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
“கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக்கொள்… என்னுடன் சிறிது நேரம் அமர்ந்திரு. இன்று நீ செய்து முடிக்க வேண்டிய இவை அனைத்தும் உன்னிடம் இருப்பதை நான் காண்கிறேன். ஆனால்… இங்கே, இப்போது என்னுடன் செலவிட சிறிது நேரம் ஒதுக்கு.
என்னைப் பிரியப்படுத்தவும், என்னை நன்றாக அறிந்துகொள்ளவும், நீ கொண்டிருக்கிற உன் விருப்பத்தை நான் காண்கிறேன். என்னைப் புரிந்துகொள்ளவும், என் குரலைக் கேட்கவும் நீ கொண்டிருக்கிற தாகம் குறித்து நான் அறிவேன்.
உன் எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டு. ஆனால் சலசலப்புக்கு மத்தியில் உன்னால் எப்படி எனக்குச் செவி சாய்க்க முடியும்? இந்தச் சத்தங்களுக்கு மத்தியில்… சூறாவளிபோல சுழன்றுகொண்டிருக்கும் உன் வேலைகளுக்கு மத்தியில் என் குரலை நீ எப்படிக் கேட்பாய்?
வேகத்தைக் குறை… வா.
ஒரு கணம் நில்… வா.
கவலைகள் உன்னை ஒடுக்க விடாதே… வா.
உன் இருதயத்திற்குள் பயம் ஊடுருவ விடாதே… வா.
பணத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படாதே… வா.
நாளையதினம் குறித்து பயப்படாதே… வா.
ஒரு கணம் என்னுடன் அமர்ந்து என் குரலைக் கேள். நீ ஊக்கமடைந்து புதுப்பிக்கப்படுவாயாக.
என் ஜீவனைப் பெற்றுக்கொள். என் சமாதானத்தைப் பெற்றுக்கொள். நான் தரும் சந்தோஷத்தை வரவேற்பாயாக… என்னை வரவேற்பாயாக… நான் உனக்காக இங்கே இருக்கிறேன்.”