சந்தேகம் உன்னைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதே!

முகப்பு ›› அற்புதங்கள் ›› சந்தேகம் உன்னைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதே!

உன் பிதாவாகிய தேவன் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துகிறார் என்பது உனக்குத் தெரியுமா? சொல் அகராதியில், திட்டம் என்பது, “ஒரு காரியத்தைச் செய்ய ஒருவர் கொண்டிருக்கும் நோக்கம், ஒரு குறிப்பிட்ட செயல்திட்டம் அல்லது திட்டவட்டமான நோக்கம்” என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

நீதான் ஆண்டவரின் திட்டம் என்று நான் நம்புகிறேன். உன் வாழ்க்கையில் அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்தையும் அவர் நினைத்து வைத்திருக்கிறார். அந்த நோக்கம் என்னவாக இருக்கும் என்று நீ கேட்கலாம்? அவை சமாதானம், வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திட்டங்களே! (எரேமியா 29:11)

ஆண்டவர் ஒரு நல்ல தகப்பன், உனக்கான அவருடைய திட்டங்களும் நல்லவைகளே. ஒருவேளை நீ, “எரிக், ஆண்டவர் எனக்காக நல்ல திட்டங்களை வைத்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆண்டவர் என்னை மறந்துவிட்டார் போல இருக்கிறது” என்று என்னிடம் சொல்லலாம்.

ஆண்டவருக்கு உன்னை நன்றாகத் தெரியும். அவர் உன்னை முழுமையாக அறிந்து வைத்திருக்கிறார். அவர் உன் சந்தேகங்கள், உன் அச்சங்கள், மற்றும் உன் கண்ணீரைப் பார்க்கிறார். (சங்கீதம் 139:1-2). அவர் உன்னைத் தகுதி நீக்கம் செய்தாரா? “இவனால்/இவளால் நல்லது எதுவும் வராது… நான் கைவிட்டுவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டாரா? இல்லை, இல்லை, இல்லை! ஆண்டவர் கைவிடமாட்டார். உன்னை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்!

அவர் எப்போதும் விரும்பும் நபராக உன்னை உருவாக்குவதே அவருடைய திட்டமாகும். அவர் அதைச் செய்வார்! அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கவும், அவருடைய நீதியை வெளிப்படுத்தவும், உன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அவருடைய அன்பைப் பரப்பவும் அவர் உன்னைச் சிருஷ்டித்தார். அவர் உன்னை கவனமாகத் தேர்ந்தெடுத்து உன்னை அன்போடு அழைத்தார்.

உன்னைத் தடுக்கவோ, உன் வேகத்தைக் குறைக்கவோ அல்லது உன்னைக் கட்டுப்படுத்தவோ நீ சந்தேகத்திற்கு இடமளிக்காதே. நீ அவருடைய பிள்ளை, உன்னைக் குறித்த அவருடைய திட்டங்கள் நிச்சயம் நிறைவேறும்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!