சத்துருவை விரட்டிவிடு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› சத்துருவை விரட்டிவிடு!

இன்று ஜெயத்தின் நாள், ஏனென்றால்…

  • பிதாவாகிய தேவன் உன்னை நேசிக்கிறார், மற்றும் உன்னைப் பாதுகாத்துப் பராமரித்துக்கொண்டிருக்கிறார்.
  • இயேசு தம்முடைய சிங்காசனத்திலிருந்து எழுந்து உனக்காக யுத்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்.
  • அவருடைய ஆவியானவர் உன்னைப் பலப்படுத்தி உன்னை உயர்த்துகிறார்.

அவருடைய வார்த்தை உனக்கு ஆறுதலளிக்கிறது மற்றும் நீ விலையேறப்பெற்றவன் என்று உனக்கு மறுபடியும் உறுதியளிக்கிறது… நீ ஆண்டவருக்கு எல்லாவற்றிலும் தகுதியுள்ளவனாய் இருக்கிறாய்!

என் நண்பனே, நீ உன்னதமான தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தியாய் இருக்கிறாய். கடந்த காலமோ, எதிர்காலமோ, மனுஷர்களோ, சூழ்நிலைகளோ உன் பிதாவின் அன்பிலிருந்து உன்னைப் பிரிக்க முடியாது! (வேதாகமத்தில் ரோமர் 8:38-39 ஐப் பார்க்கவும்)

யுத்தங்களை எதிர்கொள்ளும்போதும், உன்னை விழப்பண்ணும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போதும், நீ பலமுள்ளவனாய் இருப்பாய், உறுதியுடன் பற்றிப்பிடித்துக் கொண்டு, கற்பாறையில் நங்கூரமிட்டு இருப்பாய். நீ இயேசுவையே நோக்கிக்கொண்டிருக்கிறாய்! பிரச்சனையின் மீது அல்ல… மாறாக இயேசுவின் மீது! சோதனையின் மீது அல்ல… மாறாக இயேசுவின் மீது!

நீ சத்துருவுக்கு எதிர்த்து நிற்பதால், அவன் உன்னைவிட்டு ஓடிப்போகிறான். உன் வாழ்க்கையில் அவனுக்கு எந்த இடமும் இல்லை!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!