கேளு, ஊக்குவி, அன்புகூரு

முகப்பு ›› அற்புதங்கள் ›› கேளு, ஊக்குவி, அன்புகூரு

“இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.” (ஏசாயா 50:4)

வேதனையும் பாரமும் நிறைந்த ஆத்துமாக்களுக்கு நீ, உற்ற நேரத்தில் ஒரு வார்த்தை சொல்லவேண்டுமென்று, ஆண்டவர் அவருடைய வார்த்தையை உன் வாயில் வைக்கிறார். இப்படி ஊக்கமளிக்கும், உயர்த்தும் மற்றும் பெலப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த விலைமதிப்பற்ற வார்த்தைகளைப் பெற, முதலில் நீ அவருடைய குரலைக் கேட்க வேண்டும்.

தந்தையின் குரலை எவ்வாறு பகுத்தறிவது என்பதை உங்களுக்குக் கற்பிப்பதே பரிசுத்த ஆவியானவரின் விருப்பமாக இருக்கிறது…இதனால், ஆயிரம் குரல்களின் மத்தியில் நீ அதை அடையாளம் கண்டு, அதைக் கேட்டு, உன்னை சுற்றிலும் இந்த மன்னாவைப் பகிர்ந்து கொள்ளலாம்!

இதனால்தான், காலையில், நீ ஆண்டவரின் முன்னிலையில் அமைதியாக இருக்கையில், உன் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் கஷ்டங்களை அவருடன் பகிர்ந்துகொள்கையில்…அவர் உனக்கு சொல்வதை நீ கேட்கவும் நேரம் ஒதுக்கு. ஒரு கணம் நின்று, கவனமாகக் கேளு. தந்தையையும், அவருடைய குரலையும், இதயத்தையும் நீ கேட்க இயலும். அவர் உன்னை நேசிக்கிறார் என்பதை நிச்சயமாக உனக்கு சொல்வார், மட்டுமின்றி, உன் பக்கத்து வீட்டுக்காரர், உன் சகோதரி, உன் முதலாளி, உன்னுடன் பணிபுரியும் ஒரு நபரை பற்றியும் பேசுவார்.

  • அவர்களுக்காக அவருடைய அன்பை உன் இதயத்திற்குள் பொழிவார்.
  • மனதுருக்கத்தால் உன்னை நிரப்புவார்.
  • அவருடைய கண்களின் வழியாய் நீ அவர்களைப் பார்க்க உன்னை அனுமதிப்பார்!

என் அன்பரே, இந்த உலகத்திற்கு தேவையான ஆண்டவருடைய ஊக்கம் உன் வாயில் உள்ளது! குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், ஊக்குவிக்கவும், ஜீவனை அறிவிக்கவும் உன்னை பயன்படுத்த அவர் விரும்புகிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!