கேட்கப்படாத ஜெபங்கள் என்ன ஆகின்றன?

முகப்பு ›› அற்புதங்கள் ›› கேட்கப்படாத ஜெபங்கள் என்ன ஆகின்றன?

என் வாழ்வில் நான் பார்த்த, நூற்றுக்கணக்கான மக்கள் கேட்கப்படாத ஜெபங்களால் குழம்பியிருக்கிறார்கள்.

ஒரு புதிய கிறிஸ்தவனாக, ஆண்டவர் மீது எனக்கு அதீத விசுவாசம் இருந்தது. சில வருடங்களுக்குள் அவர் என் வாழ்வில் பல கிரியைகளை செய்திருந்தார்: என் விசுவாசம் பெரியதாய் இருந்தது, மற்றும் என் ஜெபங்கள் தீவிரமாக இருந்தன. என் விசுவாசம் சோதிக்கப்பட்ட அந்த நாளை நான் மறக்க மாட்டேன். நிச்சயம் முடித்த என் வருங்கால மனைவியையும் அவளுடைய குடும்பத்தினரையும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுகொண்டிருக்கும்போது வண்டியில் எரிவாயு (பெட்ரோல்) தீர்ந்துவிட்டது. நான் ஆண்டவரிடம் அதிசயமாக எரிவாயு தொட்டியை நிரப்பும்படி கேட்கையில், மொத்த குழுவும் ஒரு அற்புதத்திற்காக காத்திருந்தது. நாங்கள் பல இடைவெளிகள் விட்டு காத்திருந்து வண்டியை செயலாக்க முயற்சித்தோம், ஆனால் அது நடக்கவில்லை.

இந்த நம்பமுடியாத தடுமாற்றத்தை சந்திக்க நான் தள்ளப்பட்டேன். நீ திட்டமிட்டவண்ணம் உன் ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்றால் நீ என்ன சொல்வாய்?

ஆண்டவர், நான் கேட்டபடி என் வண்டியின் எரிவாயு பெட்டியை நிரப்பாவிட்டாலும், ஒரு சாலை மீட்பு சேவைக் குழு எங்களுக்கு தேவையான எரிவாயுவை இலவசமாக தந்து எங்களை காப்பாற்றினார்கள். ஆண்டவர் என் ஜெபத்திற்கு வேறு வழியில் பதில் தந்தாரோ? எப்படி பார்த்தாலும், இது ஒரு அற்புதமா?

உனக்கு கேட்கப்படாத ஜெபங்கள் உள்ளனவா? அதை நீ எப்படி எடுத்துக்கொள்கிறாய்? ஒருவேளை நீ இப்போதும் கூட அப்படி ஒரு சூழ்நிலையை கடந்து சென்றுகொண்டிருக்கலாம்…

ஆண்டவரையும் ஜெபத்தின் பங்கையும் நான் புரிந்துகொள்ள இந்த எளிமையான கதை எனக்கு ஒரு அடித்தளமாக மாறி உதவியதால் நான் இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

வேதாகமம் சொல்கிறது:

  • நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16)
  • இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். (மத்தேயு 18:20)

கேட்கப்படாத ஜெபங்கள் போல் தோன்றுகிற இந்த தொல்லையான பிரச்சனையை புரிந்துகொள்ள நான் உனக்கு சில வழிகளை காண்பிக்க விரும்புகிறேன்:

  • நீ தவறானதை கேட்கிறாயா?
  • ஆண்டவர் அதற்க்கு திட்டமிடாத வேறு வழியில் பதிலளிக்கிறாரா?
  • வேறு யாரிடமாவது நீ ஜெப உதவியை நாட வேண்டுமா?
  • பதில் ‘இல்லை’ என்பதா?
  • கண்ணுக்கு புலப்படாத ஏதோவொன்று உன் ஜெபத்திற்கான பதிலை தாமதமாக்குகிறதா?

ஆண்டவர் எப்போதும் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்று நான் நம்புகிறேன், ஆனால் அதை புரிந்துகொள்வதற்கு நாம் சிரமப்படுகிறோம்.

ஜெபத்தை விட்டுவிடாதே, ஏனென்றால் அப்படித்தான் நீ ஒரு அற்புதமாக மாற இயலும்.

நீ ஒரு அற்புதம்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!