குயவனின் வேலை மீது நம்பிக்கை வைத்தல்

முகப்பு ›› அற்புதங்கள் ›› குயவனின் வேலை மீது நம்பிக்கை வைத்தல்

வணக்கம்!

ஒரு குவளையை உருவாக்கும் செயல்பாட்டில், அதை வனைவதற்கு வேண்டிய களிமண் உனக்குத் தேவைப்படும். களிமண் இருக்கும் இடத்தில் குயவன் பாண்டத்தை உருவாக்கமாட்டான், எனவே, அவன் களிமண்ணைத் தேர்ந்தெடுத்து அதை வனையும் ஒரு இடத்திற்குக் கொண்டுவருவான்.

முதலாவதாக, களிமண் ஆயத்தமாக வேண்டும். அதை அப்படியே மட்பாண்டமாக வடிவமைக்க முடியாது; அது வறண்டதும் மண் கட்டிகள் நிறைந்ததாகவும் இருப்பதால் அதன் மீது முதலில் தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரப்பதத்துடன் பிசையப்பட வேண்டும். அந்த நேரத்தில், அதை வனைவதற்குத் தடையாய் அதில் இருக்கக்கூடிய சில குப்பைகளையும், கூழாங்கற்களையும் உன்னால் எளிதில் அகற்ற முடியும். குயவன் கரத்தில் இசைவாய் இருக்க, மிருதுவான கலவையாக மாறும்படி அதை நன்றாகப் பிசைய வேண்டும். எரேமியாவின் காலத்தில், இந்தச் செயல்முறை கால்களாலோ அல்லது மரச் சுருளைக் கொண்டோ செய்யப்பட்டிருக்கலாம்.

பாண்டத்தை வனையும் செயல்முறை – குயவன் ஒரு கைப்பிடி நிறைய உள்ள களிமண்ணை எடுத்து, பந்து போல் உருட்டி, அதை சுழலும் அச்சின் மையத்தில் வைத்து சுழலச் செய்யத் தொடங்குகிறான்.

ஒவ்வொரு வகையான குவளைக்கும் தேவையான வேகத்திற்கு ஏற்ப அது சுழலும்.
குயவன்தான் வேகத்தையும் குவளையின் வடிவத்தையும் தீர்மானிக்கிறான்.

“இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.” (ஏசாயா 64:8)

நீ ஆண்டவர் தாம் விரும்பும் வடிவத்தில் பாத்திரத்தை வடிவமைக்கும் செயல்முறையில் இருக்கிறாய், கவலைப்படாதே, அவர் உன்னை உலகின் மிகச்சிறந்த பரிபூரண நபராக உருவாக்குவார்!

நம்முடைய குறைகளை ஒப்புக்கொண்டு, நம் வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைக்கும்போது, ​”என் வாழ்க்கையை நீர் வடிவமைக்க வேண்டும்” என்று நாம் ஆண்டவரிடத்தில் வெளிப்படுத்துகிறோம்.

நாம் களிமண் என்பதை ஒப்புக்கொள்ள நமக்கு பணிவும் தாழ்மையும் வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் இப்போது,​ ஆண்டவரது கரங்களில், சகலமும் கனத்துக்குரிய பாத்திரமாக மாறுகிறது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!