கிறிஸ்துவைத் தேர்ந்தெடுப்பதே ஜீவனைத் தேர்ந்தெடுப்பது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› கிறிஸ்துவைத் தேர்ந்தெடுப்பதே ஜீவனைத் தேர்ந்தெடுப்பது!

“திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” (வேதாகமத்தில் யோவான் 10:10ஐப் பார்க்கவும்)

வாழ்வின் ஜீவனும் அதன் முழுமையும் நிறைந்த ஒருவர்தான் இயேசு! அவர் நித்திய ஜீவனுக்கான வழியாக மட்டுமல்லாது – அவரே பரிபூரண ஜீவனாகவும், மெய்யான ஜீவனாகவும் இருக்கிறார். நம் வாழ்க்கை சந்தோஷம், அமைதி மற்றும் தேவனுடைய பிரசன்னத்தினால் சூழப்பட்டுள்ளது.

ஒரு மீன் தண்ணீருக்கு வெளியே வந்து வாழ முடியாததுபோல, தேவனுடைய பிள்ளையாக, நாம் கர்த்தருடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்காமல் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

சர்வத்தையும் சிருஷ்டித்தவரும், சர்வத்தையும் அறிந்தவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஆலோசனையை விட்டு ஏன் விலகுகிறாய்? உன்னோடு நடக்கவும், உன்னைப் புரிந்துகொள்ளவும், உன்னைக் குணப்படுத்தவும், உன்னை ஆறுதல்படுத்தவும் அவரை விட சிறந்தவர் யார்?

இயேசுவைத் தேர்ந்தெடுப்பது என்பது நண்பர்களில் மிகவும் விசுவாசமுள்ள ஒரு நண்பரையும், நம்பிக்கைக்குரியவர்களில் மிகவும் பொறுமையுள்ள ஒரு நபரையும், ஆலோசகர்களில் மிகவும் புத்திசாலியாய் இருக்கும் ஒரு நபரையும் தேர்ந்தெடுப்பது போன்றதாகும்.

என் நண்பனே/தோழியே, உன் நோக்கங்கள் நிறைவேறும்படி அவரை நம்பு, உன் இருதயத்தில் உள்ளவைகளை மனம்விட்டு அவரிடம் பேசு… பொறுமையாக காத்திரு, அமர்ந்திருந்து அவருடைய சத்தத்துக்குச் செவிகொடு. அவருடைய தெய்வீக ஆலோசனையையும், உன்னதத்திலிருந்து கிடைக்கப்பெறும் அவரது ஞானத்தையும் பெற்றுக்கொள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!