கிறிஸ்துமஸ் என்பதன் உண்மையான அர்த்தம்

முகப்பு ›› அற்புதங்கள் ›› கிறிஸ்துமஸ் என்பதன் உண்மையான அர்த்தம்

“பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்” என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் கேரல் பாட்டு உனக்குத் தெரியுமா?

“பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை”

இந்த நேர்த்தியான பாடல் வரிகள் நமது அற்புதமான இரட்சகரைப் பற்றி நமக்கு விவரிக்கின்றன. இயேசுவே பிரதான மூலைக்கல்லாகவும், வரலாற்றின் திருப்புமுனையாகவும், இருதயத்தை மாற்ற வல்லவரும், சமாதானப் பிரபுவும், வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். இவ்விதமாய் வசனம் கூறுகிறது,

“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், …அவர் என்னை அனுப்பினார்.” (ஏசாயா 61:1)

இந்த அற்புதமான பாடல் வரிகள் மற்றொரு அதிசயத்தை நமக்கு நினைவூட்டுகிறது: நாம் தேவனுடைய பிள்ளைகள்! நாம் யாவரும் ராஜ குடும்பத்தினர்! நம்முடைய இரட்சகராகிய இயேசுவைப்போல நாமும் சுவிசேஷத்தை அறிவிக்க முடியும்.

“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், …அவர் என்னை அனுப்பினார்.” (ஏசாயா 61:1)

கிறிஸ்துமஸ் என்பது கிருபை, மனதுருக்கம் மற்றும் விசுவாசத்தில் அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கொண்டாட்டமாகும். கிறிஸ்துமஸ் என்பது மனம் உடைந்தவர்களுக்குக் கொண்டு வரப்படும் நற்செய்தியாகும்.

தனிமையில் இருப்பவர்களுக்கும், பொருளாதார பற்றாக்குறையில் உள்ளவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அல்லது மனச்சோர்வடைந்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ் காலமானது மிகவும் கடினமான காலகட்டமாகும், அப்படிப்பட்டவர்களை நாம் கவனிக்க வேண்டிய ஒரு காலகட்டமாகும். இயேசு உன்னைப் பார்க்கிற வண்ணமாகவே நீயும் அவர்களை மனதுருக்கம் நிறைந்த கண்களால் பார்ப்பாயா?

நீ இந்தப் பூமியில் இயேசுவின் கைகளாகவும், கால்களாகவும் செயல்பட இருக்கிறாய். மனதுருக்கத்தால் நிறைந்த அவருடைய பார்வையாக நீ இருக்கிறாய்; அன்பு நிறைந்த அவருடைய இருதயமாய் நீ இருக்கிறாய். மனம் உடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லவே அவர் உன்னை அனுப்பியிருக்கிறார்! எனவே, இந்தக் கிறிஸ்துமஸில், நீ சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து செயல்படு… மற்றவர்கள் மீது அன்பு செலுத்து! ஏனென்றால் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதால் அவர்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!