காரியங்களை மாற்றியமைக்கத் தயாராகு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› காரியங்களை மாற்றியமைக்கத் தயாராகு!

பொதுவாகவே, நீ ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வீடு மாறும் போதுதான், உன் வீட்டில் நீ எவ்வளவு பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறாய், அவைகள் எவ்வளவு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நீ உணர்கிறாய். ஆகையால் எல்லாவற்றையும் வெளியில் எடுத்துப் போட்டு, பிரித்தெடுத்து அதை சீராக்க முயற்சிக்கிறாய்! மிகச் சிறிதாகவோ, மிகப் பெரிதாகவோ இருக்கிற ஆடைகள், அல்லது மிகவும் பழைய பாணியில் உள்ள ஆடைகளைப் போல, உனக்கு உபயோகமற்ற அல்லது இனிமேல் பயன்படாத பொருட்களை தூக்கி எறிகிறாய் அல்லது தேவைப்படுகிற வேறு யாருக்காவது கொடுத்துவிடுகிறாய்.

இன்று நீ உன் பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப்பதிலாக பிதாவிடமிருந்து புதிய ஆடைகளைப் பெற்றுக்கொண்டால் எப்படி இருக்கும்? இதோ, வேதாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.” (வேதாகமத்தில் ஏசாயா 61:3ஐப் பார்க்கவும்)

தேவன் தம்முடைய ஆனந்த தைலத்தை உன் மீது ஊற்றி, துதியின் ஆடையை உனக்கு உடுத்துவிக்க விரும்புகிறார்! அதைப் பெற்றுக்கொள்வதற்கு, உன் “பழைய ஆடைகளை” நீ அப்புறப்படுத்த வேண்டும். அது கீழ்க்கண்டவற்றில் ஒன்றாக இருக்கலாம்.

  • ஒரு கெட்ட பழக்க வழக்கம்.
  • “ஜெயிக்க மாட்டாய்” என்ற பயம்.
  • உன்னால் இன்னும் மேற்கொள்ள முடியாத இரகசிய பாவம்.

இதில் எதுவாக இருந்தாலும், அதை சிலுவையின் அடியில் வைத்துவிட்டு, ஒருபோதும் மீண்டும் எடுக்காமல் இருக்கவும், அதிலிருந்து விடுபடவும் நான் உன்னை அழைக்கிறேன்!

உன் கடந்த காலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை அல்லது நீ எங்கிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை, ஆண்டவர் உண்மையுள்ளவர் என்றும், தம்முடன் புதிய ஜீவனில் நடக்க உனக்கு உதவுவார் என்றும் நீ விசுவாசி!

என்னுடன் சேர்ந்து ஜெபி… “ஆண்டவரே, என் பழைய ஆடையை சிலுவையின் அடியில் விட்டுவிடுகிறேன்! என்னால் விட்டுவிட முடியாத இந்தக் கெட்ட பழக்கத்தையும், இவ்வளவு காலமாக நான் சுமந்துகொண்டிருந்த இந்தக் குற்ற உணர்ச்சியையும்… உமது கரங்களில் வைத்துவிடுகிறேன். எனக்கு புதுவாழ்வு தந்த இயேசுவின் தியாகத்திற்கு நன்றி செலுத்துகிறேன். இப்பொழுது விசுவாசத்தினால் நான் பெற்றுக்கொள்கிற உமது மன்னிப்புக்காகவும், உமது சமாதானத்திற்காகவும், உமது கிருபைக்காகவும் நன்றி! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!