காத்திருப்பது கடினமாகத் தோன்றும்போது என்ன நடக்கிறது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› காத்திருப்பது கடினமாகத் தோன்றும்போது என்ன நடக்கிறது?

ஒரு விவசாயி விதைக்கும்போது, தன் நல்ல விளைச்சலை அறுவடை செய்யத்தக்கதாக நல்ல மழை வரும் என்று எதிர்பார்க்கிறான். சில சமயங்களில் தாமதமாக மழை பெய்கிறது; சில சமயங்களில் மழை பெய்யாமல் போய்விடுகிறது. அப்பொழுது அந்த விதை காய்ந்து பலனற்றுப்போகிறது, அதோடு கூடவே நல்ல அறுவடையைக் காண வேண்டும் என காத்துக்கொண்டிருந்த அந்த விவசாயியின் நம்பிக்கையும் அற்றுப்போகிறது.

இந்த விவசாயியைப்போலவே நாமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றும் தொழிலிலும் பல திட்டங்களை விதைக்கிறோம், தேவ கிருபையினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நாம் காத்திருக்கிறோம். ஆனால் இந்த விதைப்புக்கும் அறுவடைக்கும் இடையேயான காத்திருப்பின் காலம் மிகவும் நீண்டதாக இருப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் காத்திருப்புக் காலகட்டமானது நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.

என் நண்பனே / தோழியே, இந்த விவசாயியைப்போல நீயும் தேவனை நம்ப வேண்டும் என்று உனக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர் தமது வார்த்தையாகிய எசேக்கியேல் 34:26ல் இவ்வாறாக சொல்லுகிறார்: “…ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.” (பரிசுத்த வேதாகமம், எசேக்கியேல் 34:26)

கவலைப்படாதே, ஏற்ற காலத்தில் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுவார் என்பதை நீ உறுதியாய் நம்பு. தைரியமாய் இரு, தேவன் உனக்குத் தந்த வாக்குத்தத்தத்தை நீ உறுதியாய் பற்றிக்கொள். தேவன் உனக்காக வானத்தில் உள்ள தமது பண்டகசாலையைத் திறப்பார். அப்பொழுது உனது திட்டம் நிறைவேறி பலன் கிடைக்கும். அவர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர்!

என்னோடு இணைந்து தேவனுக்கு நன்றி சொல்… “கர்த்தாவே, என் மீது நீர் வருஷிக்கப்பண்ணின பரலோக மழைக்காக நன்றி, நீர் உண்மையுள்ளவர், நீர் மாறாதவர், நீர் பொய் சொல்வதில்லை. நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி; நீர் எனக்கும், மற்றும் என் மூலமாகவும் செய்யப்போகின்ற எல்லாவற்றிற்காகவும் நன்றி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!