காத்திருக்கும் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது⏰

முகப்பு ›› அற்புதங்கள் ›› காத்திருக்கும் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது⏰

காத்திருத்தல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதாவது, கிறிஸ்துமஸ் நாளுக்காகக் காத்திருப்பது முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் நீ கர்த்தருக்காகக் காத்திருப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டாய் என்று நான் நம்புகிறேன்! 😉

நீ காத்திருக்கும்போது, செய்ய வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், தடைகளை அகற்றுவதுதான். உதாரணமாக, என் மனைவி வீட்டிற்கு வருவதற்காகக் காத்திருக்கும்போது, வழக்கமாக எங்கள் வீட்டு வாசலில் குவியலாகக் கிடக்கும் காலணிகளைத் துடைத்து, சுத்தம் செய்து கதவைத் திறந்து, அவள் உள்ளே பிரவேசிப்பதை நான் எளிதாக்குகிறேன்.

அதுபோலவே, கர்த்தருக்குக் காத்திருக்கும்போது, அவருடைய வருகைக்கான வழியை நாம் ஆயத்தப்படுத்தலாம்.

நாம் எதிர்கொள்ளும் தடைகள் ‘பாவங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஐயோ! 😬 அந்த வார்த்தை நமக்கு உண்மையில் பிடிப்பதில்லை, அப்படித்தானே?

பாவத்துடன் போராடுவது அவமானம் இல்லை, ஏனென்றால் எல்லோரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகிறோம் (ரோமர் 3:23) இருப்பினும், “நாம் அனைவருமே பாவம் செய்கிறோம், அதனால் பரவாயில்லை” என்றும் “நான் மனிதன்தானே” என்றும் நினைத்துக்கொண்டு இருப்பது ஆபத்தானது. எந்த அவமானமும் தீங்கு இல்லை என்று அர்த்தம் இல்லை: பாவம் இன்னும் அகற்றப்பட வேண்டிய ஒரு தடையாக உள்ளது.

யோவான் சுவிசேஷகர் தடைகளை நீக்குபவராய் இருந்தார்; அவருடைய ஒரே வேலை, கர்த்தருக்குக் காத்திருக்கவும், அவர்களுடைய பாவங்களிலிருந்து விடுபடவும் மக்களுக்குக் கற்பிப்பதாகும்.

“அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞான ஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான்.” – மாற்கு 1:2-4

இங்கே முக்கியமானது மனந்திரும்புதலும் மன்னிப்பும்தான். மனந்திரும்புதல் நமது பகுதி, மன்னிப்பு இயேசுவின் பகுதி:

“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9)

மனந்திரும்புதலானது, மறைவான பாவங்களை வெளிப்படுத்தும்படி ஆண்டவரிடத்தில் கேட்பதில் தொடங்கி, அவற்றை அறிக்கையிடுவதில் முடிகிறது. அறிக்கையிடுதலும் மனந்திரும்புதலும் கர்த்தரின் வருகையை சமீபமாக்குகிறது (2 பேதுரு 3:11-14)

நான் உனக்காக ஜெபிக்கிறேன்:

“பரலோகப் பிதாவே, இவரின் வாழ்க்கையில் ஏதேனும் தடைகள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்தி, அவற்றை அறிக்கையிட தைரியம் தாரும். உமது மன்னிப்பிற்காகவும், பாவம் செய்யும்போது, அவற்றை மன்னிக்கும் உமது மகா பெரிய கிருபைக்காகவும் நன்றி. ஆமென்.”

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!