உன் நாட்களை நீ வெற்றியுடன் வாழலாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் நாட்களை நீ வெற்றியுடன் வாழலாம்!

சில வேளைகளில், ஒரு நாளை நாம் தொடங்கும் முன்பே, திரளான எண்ணங்கள் நம்மை அச்சுறுத்தத் தொடங்கிவிடும். “இந்த நாளில் நான் செய்ய வேண்டிய காரியங்களை செய்யத் தேவையான நேரம் எனக்குக் கிடைக்காது… இந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க எனக்கு நேரம் இருக்குமா?…இன்று என் கடமைகளை நிறைவேற்ற முடியாத ஒரு திறனற்ற நபராக நான் என்னை உணர்கிறேன்…” என்ற இப்படிப்பட்ட எண்ணங்கள் நம்மைத் துன்புறுத்தும்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக, விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. (வேதாகமத்தில் மாற்கு 9:23ஐ பார்க்கவும்)

ஆம், அது நிச்சயம் நடக்கும்… நீ இந்த நாளை ஒரு வெற்றியுள்ள நாளாக அனுபவித்து வாழலாம்.

வெற்றி என்பது நமது “எண்ணங்களை” சார்ந்ததுதான், சூழ்நிலைகளைச் சார்ந்ததல்ல. வேறு விதமாகக் கூறவேண்டுமானால், நாம் சில காரியங்கள் நடக்குமென நம்பிக்கை வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்… ஆனால் அந்தக் காரியம் நாம் நினைத்தது போல நடக்காமல் போகும்போது, அந்தக் கடினமான சூழல் நம்மை மேற்கொள்ளாதபடிக்கு, நம் இருதயத்தில் சமாதானத்தை தரித்துக்கொண்டு, அந்த சூழலை நாள் முழுவதும் மேற்கொள்வதே எண்ணங்களில் வெற்றி பெறுவதாகும்.

என் அருமை நண்பனே/ தோழியே, இன்று காலை வேளையில் இந்தச் செய்தி உன்னோடு பேசிக்கொண்டிருக்குமானால், இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படியாக உன்னை அழைக்கிறேன்… “இயேசுவே, இந்த நாளை உம்மிடம் தருகிறேன். இந்த நாளில் என்ன நடந்தாலும், உமக்குள் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். இந்த நாளில் நடப்பதை உம்மிடம் தந்துவிட்டு, உம்முடைய சமாதானத்தை என் இருதயத்தில் பெற்றுக்கொள்கிறேன். இயேசுவே உம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். அதற்காக நன்றி கூறுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே இன்று நான் வெற்றியின் பாதையில் நடக்கப்போகிறேன், ஆமென்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில், என் குடும்பத்திலும், என் திருமண வாழ்விலும், பிரச்சனைகள் எழும்பியது. உண்மையாகவே, என் திருமணத்தின் தொடக்கத்திலேயே பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டன. நான் ஒரு கிறிஸ்தவப் பெண், என் கணவர் இந்து மதத்தை சேர்ந்தவர். ஒரு இந்து குடும்பத்தோடு ஒன்றி வாழ்வது மிகக் கடினமாய் இருந்தது. யாராலும் எனக்கு உதவ முடியவில்லை. ஆனால், இயேசுவால் மட்டும் தான் எனக்கு உதவ முடியும் என்று எனக்கு நன்றாய் தெரியும். என் திருமண பந்தம் என் விருப்பமில்லாமலே விவாகரத்தை நோக்கிச் சென்றது. நிச்சயமாகவே என் பிரச்சனைகள் தீர்ந்துபோகும் என நம்பினேன். நான் நம்பியது போலவே அந்தப் பிரச்சனைகள் தீர்வைக் கண்டது. “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற உங்கள் பதிவுகளை நான் வாசித்து வந்தேன். அதேபோல் அற்புதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் இயேசுவுக்குள் என் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நானும் என் கணவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் பிரிய வேண்டுமென எப்போதும் நினைத்ததே இல்லை. சில நபர்கள், சூழ்நிலைகள், மற்றும் சில காரியங்கள் நாங்கள் பிரிந்து போகும்படியாய் செயல்பட்டது. ஆனால் இறுதியில், இயேசுவின் மேல் கொண்ட விசுவாசத்தால் வெற்றி என்னுடையதாயிற்று. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. (அஞ்சனா, இந்தியா).

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!