கர்த்தருடைய தூதன் உன்னைச் சுற்றிப் பாளையமிறங்கிக் காக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› கர்த்தருடைய தூதன் உன்னைச் சுற்றிப் பாளையமிறங்கிக் காக்கிறார்!

வேதாகமம் சொல்கிறது, “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” (சங்கீதம் 34:7) இது ஒரு மாறாத வாக்குத்தத்தம். உன்னை நீயே தற்காத்துக்கொள் என்று சொல்லி, ஆண்டவர் உன்னை ஒருபோதும் தனியே விட்டுவிடுவதில்லை… அவர் நீ பாதுகாப்பாய் இருக்கிறாய் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

ஏன் “பாளையமிறங்க வேண்டும்?” இஸ்ரவேல் மக்கள் பாலைவனத்தில் வாழ்ந்த காலத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது. எதிரிகள், மற்ற கோத்திரத்து கொடிய மக்கள், கொடிய காட்டு விலங்குகள் போன்ற ஆபத்துக்கள் அவர்களுக்கு இருந்திருக்கலாம்… ஆபத்து என்பது நிஜமான ஒன்று, ஆனால் மக்களுக்கு ஒரு வாக்குத்தத்தம் கிடைத்திருந்தது. அவர்களைப் பாதுகாக்க ஆண்டவர் தம்முடைய தூதரை அனுப்பினார். அவர்களது எல்லா பயங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க தூதர்கள் உதவினார்கள்.

“அவருக்குப் பயந்தவர்களை” என்ற வார்த்தையானது ஆண்டவரைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்று அர்த்தமுடையதல்ல. மாறாக, அது மதிப்பளித்தல் மற்றும் கனம், அன்பு மரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. நீ அவ்வாறு வெளிப்படுத்தும்போது, தேவனுடைய பாதுகாப்பும், தயவும், இரக்கமும் மற்றும் கிருபையும் உனக்கு அளிக்கப்படுகின்றன!

ஆனால் இன்று, தூதர்களை விட மேலானவர் உன்னைக் காக்கிறார்! இயேசு தேவதூதர்களை விட மிக உயர்ந்தவர் என்று வேதாகமம் விவரிக்கிறது. (எபிரேயர் 1:4) “… இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று அவர் சொல்லி இருக்கிறார். (மத்தேயு 28:20) மேலும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தப் பூமியை விட்டு பரமேறிச் சென்றபோது, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்… என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14 :18, 26; யோவான் 15: 26) என்று சொன்னார்.

நீ தனியாக இல்லை. ஆண்டவர் உன்னோடு இருக்கிறார். நீ அவரைப் பார்க்காவிட்டாலும், அவர் உனக்கு அருகில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள். ஆண்டவர் உன் பட்சத்தில் இருக்கும்போது, யார் உனக்கு எதிராக நிற்க முடியும்?

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தலைப்பின்கீழ் எனக்கு ஒரு செய்தி வருவதை நான் விரும்புகிறேன். நான் நீண்ட காலமாக இரட்சிக்கப்பட்ட அனுபவமுள்ள கிறிஸ்தவனாக வாழ்ந்து வருகிறேன்; நான் இயேசுவுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறேன்; ஆனாலும், மற்ற அனைத்து கிறிஸ்தவர்களையும் போலவே, நேர்மறையான செய்திகளைக் கேட்க தொடர்ந்து ஐக்கியத்தில் இருப்பது நல்லது. நான் சிரமப்படும்போது அல்லது சற்றே கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது,​’அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் செய்தியை வாசிக்கிறேன், நான் உடனடியாக மனநிறைவு பெறுகிறேன். நான் நேசிக்கும் ஒருவர் ஒரு ஆபத்தான வேலையை செய்து கொண்டு வருகிறார், அதைப் பற்றிப் பேச எனக்கு சுதந்திரம் இல்லை, அது அவரை மிகவும் தொலைவில் அழைத்துச் செல்கிறது; நான் தனிமையில் இருந்து கவலைப்படுகிறேன், தினமும் நான் பெறும் செய்திகள் நான் தனியாக இல்லை என்பதையும், ஆண்டவருக்கு என்னைக் குறித்த ஒரு திட்டம் இருக்கிறது என்பதையும் அறிய உதவுகின்றன. நான் பெறும் நேர்மறையான செய்திகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!” (ஜேசன்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!