கர்த்தரிடமிருந்து உனக்கு ஒத்தாசை வருகிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› கர்த்தரிடமிருந்து உனக்கு ஒத்தாசை வருகிறது!

நீ சற்று தூரம் நடந்து செல்ல முடிவு செய்திருக்கிறாய் என்று கற்பனை செய்துகொள். வானம் நீல நிறமாக‌ இருக்கிறது, சூரியன் பிரகாசிக்கிறது, பறவைகள் பாடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது! அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது. முதலில் கார்மேகம் சூழ்கிறது, பிறகு திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது. உன்னிடம் குடை இல்லை, ஏனெனில் நேற்றிரவு வானிலைச் செய்தி முன்னறிவிப்பில் மழை வருவதாக அறிவித்திருக்கவில்லை. உன் முதல் செய்கை என்னவாக இருக்கும்? முழுவதுமாக நனைவதைத் தவிர்த்துவிடுவதற்காக, நீ விரைவாக சென்றடையத்தக்க ஒரு இடத்தைத் தேடுவாய் என்று நான் நம்புகிறேன்! துரதிர்ஷ்டவசமாக, ரொம்ப நாட்களுக்கு முன்பு, இதே போன்ற ஒரு சம்பவம் என் மனைவிக்கும் எனக்கும் நடந்தது.

சில சமயங்களில், நம் வாழ்விலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம். எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று மழை பெய்யத்தொடங்கி, புயல் வீசத் தொடங்குகிறது. நீ யாரோ ஒருவர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாலோ, ஏமாற்றத்தை அனுபவிப்பதாலோ அல்லது உனக்கு மிகவும் அவசியமான உன் வேலையிலிருந்து நீ நீக்கப்பட்டுவிட்டதாலோ இதுபோன்ற சூழல் நிலவக் கூடும். இத்தகைய புயல்கள் எழும்போது,​ நாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைய வேண்டும்.

இன்று, சர்வலோகத்தையும் படைத்தவரின் கரங்களில் தஞ்சம் அடையுமாறு உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். (சங்கீதம் 121:2) அவர் நட்சத்திரங்களை உருவாக்கினார், பூமியை வடிவமைத்தார், கடலுக்கு எல்லைகளை நிர்மாணித்தார். இதைக் கவனி: அவர் மலைகளை உருவாக்கினார், நம் கண்களை மிகவும் கவர்ந்தவைகளான மிக உயர்ந்த சிகரங்களையும் அவர் உருவாக்கினார்!

இந்த தேவன்தான் உனக்கு பக்கபலமாய் இருக்கிறார்! அவரே உன்னைச் சுமக்கிறார் மற்றும் மீட்டெடுக்கிறார். அவரிடத்தில் உனக்கு சகாயம் உண்டு. நிச்சயம் அவரிடத்தில் உனக்குப் புகலிடம் உண்டு. அவர் உறங்குகிறதுமில்லை, தூங்குகிறதுமில்லை. அவர் உன்னைப் பாதுகாப்பவராய் இருக்கிறார். (சங்கீதம் 121:4-5)

உன் நம்பிக்கை அவர் மீது உள்ளது. உன் பலம் அவரிடத்தில் உள்ளது.

என் முழு மனதுடன் நான் உன்னுடன் இருக்கிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!