கர்த்தராகிய இயேசு உன் நண்பராய் இருக்கிறார்
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீ ஒருவருடன் நட்பில் இருக்கும்போது, எப்போதாவது ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக்கொள்ளலாம், இல்லையா? நண்பனின் வார்த்தைகளைப் படிக்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். பெரும்பாலும் நண்பர்களிடமிருந்து வரும் குறிப்புகள்தான், நமது அஞ்சல் பெட்டியையோ அல்லது வந்திருக்கும் கடிதத்தையோ திறக்கும்படி நம்மைத் தூண்டும்.
நீ என் தோழமையாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது! இந்த நேரத்திலும், இந்த வார்த்தைகளை நீ வாசிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது மற்றும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மறுபடியும் உனக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்!
“அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த தினசரி தியானத்தின் பத்திகளில் சிலவற்றை நீ வாசிப்பதன் மூலம் நமக்கிடையே உருவாகும் இந்த சிறந்த உறவு அற்புதமான பலன்களை உருவாக்கி, உன் வாழ்க்கையை ஆசீர்வாதங்களால் நிரப்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்!
தோழமைகளின் சில குறிப்புகளை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கேத்தரின், நெல்லி மற்றும் தேயு ஆகியோருக்கு நன்றி…
- “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த மின்னஞ்சல்களின் மூலம் என்னுடைய தினசரி ஜெபங்களுக்குப் பதிலளிக்க ஆண்டவர் உங்களைப் பயன்படுத்திக்கொண்டிருகிறார். எனவே, காலையில், நான் என் செய்திப் பெட்டியைத் திறந்து, “தேவனே, நீர் எனக்குப் பதிலளித்தீரா?” என்று எனக்குள் கேட்டுக்கொள்கிறேன், பெரும்பாலும் “ஆம்” என்று பதில் கிடைக்கிறது – கேத்தரின், பிரான்ஸ்.
- ஒரு மென்மையான புறா வந்து என் ஜன்னலில் அமர்வது போல் இருக்கிறது! இந்தக் கடிதம் என் விசுவாசத்தைப் பெலப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் நான் இதற்காகக் காத்திருக்கிறேன்! நெல்லி, சென்னை.
- “அனுதினமும் ஒரு அதிசயம்” என்ற இந்த மின்னஞ்சல்களின் மூலம் எதுவும் தற்செயலாக நடப்பதில்லை என்பதை நான் உணர்கிறேன். ஆண்டவர் ஒவ்வொரு சூழ்நிலையையும், ஒவ்வொரு சூழ்நிலையின் ஒவ்வொரு பக்கத்தையும், அவர் எனக்காக நியமித்திருக்கும் இலக்கை நோக்கி என்னை வழிநடத்த அதைப் பயன்படுத்துகிறார் என்பதையும் நான் உணர்கிறேன். தேயு, மலேஷியா
உன் சிநேகிதரான கர்த்தராகிய இயேசு உன்னை ஒவ்வொரு நாளும் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார். நீ நம்பத்தக்க உண்மையுள்ள, மென்மையான சிநேகிதராக அவர் உனக்கு இருக்கிறார். அவர் மட்டுமே உன்னை நன்கு அறிந்தவராய் இருக்கிறார். நீ தனியாக இருக்கலாம், ஆனால் கிறிஸ்து உன்னை நேசிக்கும் ஒரு நல்ல சிநேகிதராகவும் ஒவ்வொரு நாளும் அவருடைய நட்பை உனக்கு நினைவூட்டுபவராகவும் இருக்கிறார்!