கன்மலையின் வெடிப்பில் தங்கியிரு

முகப்பு ›› அற்புதங்கள் ›› கன்மலையின் வெடிப்பில் தங்கியிரு

“பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழி முயல்களும்…” (வேதாகமத்தில் நீதிமொழிகள் 30:24- 28ஐ வாசிக்கவும்)

பாறை வளைகரடியானது மிகச் சிறிய பாலூட்டி, ஒரு குழிமுயலை விடவும் அது பெரியது அல்ல. கழுகு அதை வேட்டையாடும் முக்கியப் பறவையாக இருக்கிறது. இந்தச் சிறிய வளைகரடியானது சரீரப் பிரகாரமாக அவ்வளவு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இல்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அது கன்மலைகளில் தனது வீட்டை உருவாக்கி பெரும்பாலும் மறைந்திருக்கும். ஆண்டவருடைய சிருஷ்டிப்பு போதனைகளால் நிறைந்தது, அல்லவா?

உபத்திரவம் (வீட்டிலோ அல்லது உன் பணியிடத்திலோ), அநீதி, பொய்யான குற்றச்சாட்டுகள் அல்லது வேறு ஏதாவது காரியங்கள் போன்ற சில சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நீ உதவியற்றவராகவும், வல்லமை இல்லாதவராகவும் உணரலாம். உன் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாய் இருக்கும் அல்லது உன் மகிழ்ச்சியைத் திருட முயற்சிக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் சரி, நீ கிறிஸ்துவை அறிந்திருக்கிறாய் மற்றும் அவருக்குச் சொந்தமானவராய் இருக்கிறாய் என்பதே முக்கியமானது! இயேசு தாமே உன் கன்மலையும், உன் பலமான புகலிடமும், உன் பாதுகாப்புமாக இருக்கிறார்.

நீ கன்மலையின் வெடிப்பில், இயேசுவில் மறைந்திருக்கிறாய். இந்த உண்மையின் நிமித்தமாக…

  • புயல் வீசினாலும் அது அமைதியடையும். (வேதாகமம், சங்கீதம் 107:29 ஐப் பார்க்கவும்)
  • எதிராளியானவன் சுற்றித்திரிந்தாலும் ஓடிப்போவான். (வேதாகமம், யாக்கோபு 4:7 ஐப் பார்க்கவும்)
  • உனக்கு எதிராக ஒரு படை எழும்பி வந்தாலும், நீ பயமின்றி இருக்கிறாய். (வேதாகமம், சங்கீதம் 27:3 ஐப் பார்க்கவும்)

உண்மை என்னவென்றால், இயேசு உனக்காகப் போராடுகிறார்! அவர் உன்னுடனே இருக்கிறார், உன்னை ஒருபோதும் விடமாட்டார். அவருடைய பிரசன்னத்தை உன் புகலிடமாக்கிவிடு; இன்றே அவரை விசுவாசி!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!