கனவு காணாமல் இருப்பதை விட கனவு கண்டு தோல்வி அடைவது சிறந்தது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› கனவு காணாமல் இருப்பதை விட கனவு கண்டு தோல்வி அடைவது சிறந்தது!

உலகை மாற்றும் வல்லமை பற்றிய நமது தியானத்தை நாம் தொடர்வோம்…

நாம் அனைவரும் கனவுகள் காண்கிறோம், அப்படித்தானே? இயற்கையாகவே, அவற்றை அடைவோம் என்று நம்புகிறோம். ஆனால் ஒரு கனவு நனவாகவில்லை என்றால் அது பயனற்றதாய் போய்விடாது என்பதை நினைவில் கொள்.

இன்று, நான் உனக்கு ஒரு வேலையை முன்வைக்க விரும்புகிறேன்:

  • உன் கனவை எழுது.
  • ஜெபத்தில் ஆண்டவரிடம் அதைப் பற்றிப் பேசு.
  • அதை நிறைவேற்ற எந்தெந்த நபர்கள் உனக்கு உதவ முடியும் என்பதைத் தீர்மானி.
  • அதை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கு!

தோல்வியடைந்துவிடுவேனோ என்று எண்ணி பயப்பட வேண்டாம். நீ வெற்றி பெறாவிட்டாலும், உன் தவறுகளிலிருந்து நீ கற்றுக்கொண்டு அடுத்த முறை சிறப்பாகச் செயல்படுவாய். அவர் உனக்குக் கொடுத்த கனவை நீ உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பமாகும்!

நான் உன்னை ஊக்குவிக்கிறேன்… நம்பிக்கையை இழக்காதே! உன் கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்! கர்த்தருடைய உதவியாலும் ஆசீர்வாதத்தாலும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவாயாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இன்று காலை தியான பகுதியை வாசித்தவுடன் என் கண்ணங்களில் நன்றி நிறைந்த ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. மிக்க நன்றி, இன்று இந்தச் செய்தி நான் கேட்க வேண்டிய ஒன்றுதான். உங்கள் ஊழியம் இன்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. கனவுகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட ஒரு அழகான வாழ்க்கையை வாழ்வதற்கான நம்பிக்கையை இது மீண்டும் எனக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆண்டவரின் ஆசீர்வாதங்களைப் பெற நாம் தயாராக இருக்கும்போது,​ அவர் எப்போதும் நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மேலாக, அதிகமாகக் கிரியை செய்கிறார் என்று நாம் நம்ப வேண்டும். இன்று நம்பிக்கை மற்றும் எதிர்காலம் நிறைந்த என் வாழ்க்கைக்கான திட்டங்கள் அவரிடம் உண்டு என்பதை நான் அறிந்து, ஆண்டவரையும், என்னையும் மற்றவர்களையும் நேசிக்கத் தீர்மானிக்கிறேன்!” (சார்லி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!