கண்ணீரின் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறு

முகப்பு ›› அற்புதங்கள் ›› கண்ணீரின் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறு

“என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று. அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.” (சங்கீதம் 6:6-10)

என் அன்பரே, கர்த்தர் உன் அழுகையைக் கேட்கிறார். உன்னை உயிர் வாழ உருவாக்கியவர் உன்னை ஆழமாக, மிகவும் நுணுக்கமாக அறிவார். அவருடைய பார்வைக்கு எதுவும் மறைக்கப்படவில்லை. அவருக்கு எல்லாம் தெரியும். அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார்… இந்த நொடியில் அவர் உன்னைப் பார்க்கிறார்.

நீ இதைப் படிக்கும்போது, அவர் உன் பக்கத்தில் இருக்கிறார், அவர் உன்னைப் பார்க்கிறார். கண்ணீரின் பள்ளத்தாக்கிலிருந்து உன்னை வெளியேறச்செய்து… உயர்ந்த இடத்திற்கு உன்னை கொண்டு வருவார் என்பதில் உறுதியாக இரு! உன் விசுவாசத்தை உறுதியாக்கவும், உன் இதயத்தை மீட்டெடுக்கவும், உனக்கு புது பெலன் அளிக்கவும், அவர் அண்டையில் உன்னை இழுத்துக்கொள்கிறார்.

பின்வருவதை என்னுடன் ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: “அப்பா, நீர் எனக்கு அருகில் இருக்கிறீர் என்பதை நான் அறிவேன். துக்கம் அல்லது ஏமாற்றம் என் இதயத்தை மூழ்கடிக்கும் போது, நீர் அங்கே இருக்கிறீர். கண்ணீரின் பள்ளத்தாக்கிலிருந்து என்னை மீட்டெடுத்து ஜீவனின் பாதையில் என்னை வழிநடத்துகிறீர். உம்முடைய பிரசன்னத்திற்கும், அன்பிற்கும் நன்றி. உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!