கடந்த காலத்தின் காயங்களிலிருந்து குணமடைய உன்னை விட்டுக்கொடு…

முகப்பு ›› அற்புதங்கள் ›› கடந்த காலத்தின் காயங்களிலிருந்து குணமடைய உன்னை விட்டுக்கொடு…

கண்ணுக்குத் தெரியாத பாடுகள் ஆண்டவருக்கு முன் மறைவானதல்ல. பழைய காயங்கள் கூட இன்னும் மறக்கப்படவில்லை. அவர் அவைகளை அறிவார், அவைகளைக் காண்கிறார், அவைகளிலிருந்து உன்னை குணப்படுத்த விரும்புகிறார்.

“நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்…” (வேதாகமம், எரேமியா 30:17)

அவர் உன்னை ஆறுதல்படுத்துவேன் என்றும் உன் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்றும் வாக்களிக்கிறார்… “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், …. அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.…” (வேதாகமம், ஏசாயா 40: 1-2)

உன் பாடுகள், உன் குழந்தைப் பருவத்தில் என்ன நடந்தது என்பது கூட இயேசுவுக்குத் தெரியும். ஆண்டுகள் கடந்துபோய்விட்டாலும், அதை ஆழமாகப் புதைத்துவிட நீ எல்லா முயற்சிகளையும் செய்திருந்தாலும், உன் பரம பிதா உன் இருதயத்தில் குணப்படுத்தும் தைலத்தை ஊற்றி உன்னை ஆற்றவும் உன்னை குணப்படுத்தவும் விரும்புகிறார். இயேசுவே உன் இருதயத்தை குணமாக்குவார்…

“கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும்…”, (வேதாகமம், லூக்கா 4:18)

பயப்படாதே: அவரது கை மென்மையானது, அவரது தொடுதல் தயை நிறைந்தது. அவர் உன்னை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார். அவர் உனக்குள் இருக்கிற முள்ளை அகற்ற விரும்புகிறார், எனவே, ​​சில நேரங்களில் அந்த வலி உன்னைப் பாடுகளுக்குள் மூழ்கச்செய்துவிடுகிறது…

உன் வாழ்க்கையின் முதல் நாள் துவங்கி இன்றுவரை உன்னை முழுமையாக அறிந்தவர் இயேசு மட்டும் தான்.

அவரை நம்பு. உன்னைப் பராமரிப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் இவ்வளவு மனதுருக்கமுள்ள மற்றும் முற்றிலும் தகுதியான வேறு எந்த மருத்துவரையும் எனக்குத் தெரியாது. அவர் எனக்குச் செய்தார், அதை உனக்கும் செய்ய விரும்புகிறார்… நான் அதை நிச்சயமாக நம்புகிறேன்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!