ஒவ்வொரு நடையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒவ்வொரு நடையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது!

மிகப்பெரிய விஷயங்களும், மிக அழகான வெற்றிகளும், இருதயத்திற்குள் மறைவான இடத்தில் உருவாகும் ஒரு நபரின் கனவிலிருந்து தொடங்குகின்றன. வயிற்றில் இருக்கும் ஒரு குழந்தை போல… மறைந்திருந்து அமைதியான சூழலில் அந்தக் கனவு வளர்கிறது.

இன்று, இந்தக் காணொளியைப் பார்க்க உன்னை அழைக்கிறேன்: https://www.youtube.com/watch?v=chCH23zyyt4 இது ஒரு மணல் ஓவியக் கலைஞரால் நேர்த்தியாய் உருவாக்கப்பட்ட ஈஸ்டர் கதையைப் பிரதிபலிக்கும் கைவண்ணமாக இருக்கிறது. தேவன் தம்முடைய திறனைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ஜீவன்களைத் தொடுவார் என்று இந்த மனிதன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான்… தேவன் ஒரு நபரை எவ்வளவாய் அசாதாரண வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு மகத்தான உதாரணம்!

ஆண்டவர் மிகப்பெரிய பொறுப்புகள் மற்றும் பெரிய திட்டங்களை உன்னை நம்பி ஒப்புக்கொடுக்கவும், உன் வாழ்க்கையை அவருடைய கரத்தில் உள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் விரும்புகிறார்.

ஒரு குழந்தை இந்த உலகிற்கு வருவதற்கு முன்பு, நேரம் மற்றும் முதிர்ச்சி அதற்குத் தேவைப்படுவதுபோல், நீ ஒளியினிடத்தில் பிரவேசிப்பதற்கு முன்பு ஆண்டவர் உன்னை உருவாக்கி வடிவமைத்துக்கொண்டிருக்கிறார். இது நேரம் மற்றும் துல்லியத் தன்மை தேவைப்படும் ஒரு செயல்முறையாகும்.

உன்னால் முடியாததை அவரால் நிறைவேற்ற முடியும். படிப்படியாக அதைச் செய்வார். வெற்றிக்குப் பின் வெற்றியைத் தருவார். ஒவ்வொரு அடியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உனக்காக தேவன் கொண்டிருக்கும் கனவை நிறைவேற்றுவதற்கான பாதையில் நீ சென்றுகொண்டிருப்பதால் ஊக்கமும் பலமும் பெற்றுக்கொள்!

நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “ஆண்டவரே, இன்னும் பெரிய விஷயங்களை என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்க விரும்புகிறீர் என்று எனக்குத் தெரியும்… என்னை உருவாக்கி வடிவமைத்ததற்காக உமக்கு நன்றி. உமது செயல்முறைக்கு நன்றி. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!