ஒவ்வொரு கரும்பள்ளி வண்டும்… உன்னைப் போலவே அழகாக இருக்கிறது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒவ்வொரு கரும்பள்ளி வண்டும்… உன்னைப் போலவே அழகாக இருக்கிறது!

இரண்டு கரும்பள்ளி (ladybug) வண்டுகளுக்கு இடையிலான வித்தியாசத்தை உன்னால் சொல்ல முடியுமா? ஒருவேளை இதுவரை சொல்ல முடியாமல் போயிருக்கலாம்… அவை அனைத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவையாக இருக்கின்றன. அவற்றின் நிறம், அளவு, அவைகளின் இறக்கைகளில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கை ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும் ஒரு விசேஷித்த அம்சத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதனதன் தனிப்பட்ட அழகு உண்டு. ஒவ்வொன்றும் தன்னைப் பற்றிய ஒரு சிறிய விவரத்தைக் கொண்டுள்ளது அல்லது மற்றொன்றிலிருந்து தன்னைத் தனித்துவமாக்கிக் காட்டுகிறது. மனுஷர்களாகிய நாம், முதல்பார்வையில் அவற்றை உணர்வதில்லை… நாம் ஏன் அதை உணர்வதில்லை? ஏனென்றால், இந்தச் சின்னஞ்சிறு ஜீவன்களை சிருஷ்டித்தது நாம் அல்ல… சகலத்தையும் சிருஷ்டித்தவர் ஆண்டவர், தம்முடைய வார்த்தையால் சகலத்தையும் சிருஷ்டித்தவர்… உன்னையும் அவர்தான் சிருஷ்டித்தார்.

“நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.” (வேதாகமத்தில் சங்கீதம் 139:13ஐப் பார்க்கவும்)

கரும்பள்ளி வண்டு போன்ற ஒரு நபர்தான் நீ! உன்னை அறியாதவர்கள் உன்னை முதல் முறையாக காணும்போது, உன்னை மிகவும் சிறப்பாக்குவது எது என்பது அவர்களுக்கு தெரியாது. சில நேரங்களில், ​​நீயும் கூட அதில் கவனம் செலுத்துவதில்லை. இருப்பினும், உன் நிறம், உன் முக அம்சங்கள், உன் உயரம் போன்றவற்றை தேவன் கவனமாகத் தேர்ந்தெடுத்தார்… அவர் எவ்விதத்திலும் உன்னைத் தவறாக சிருஷ்டிக்கவில்லை.

உன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதை நீ விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நீ தேவனுடைய மிகச்சிறந்த படைப்பு! நீ அவருடைய கரத்தின் சிருஷ்டியாய் இருக்கிறாய், அவர் உன்னை உருவாக்கியதற்காக ஒருபோதும் வருத்தப்படவில்லை, இனியும் அவர் வருத்தப்பட மாட்டார்.

இந்த உண்மையை உன் முழு மனதுடன் பெற்றுக்கொண்டு அதை நம்பு. உன்னைப் பரியாசம்பண்ண விரும்பும் உன் சத்துருக்களின் பொய்களால் நீ சோர்ந்து போகாதே, நீ எதற்கும் தகுதியற்ற ஒரு நபர், நீ இல்லையென்றால் உலகம் நன்றாக இருக்கும் என்று உன் காதில் திரும்பத் திரும்பச் சொல்லும் உன் சத்துருக்களின் வார்த்தையை நம்பாதே. அது ஒரு பொய்!

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்…“கர்த்தாவே, என் தாயின் வயிற்றில் பிரமிக்கத்தக்க அதிசமமாய் என்னை உண்டாக்கியதற்கு நன்றி. சில சமயங்களில் என்னை நானே ஏற்றுக்கொள்ள நான் போராடுவதை நீர் காண்கிறீர். இன்று, நீர் என்னைக் காண்கிறபடியே, நான் என்னை நேசிக்கவும் பார்க்கவும் நீர் எனக்கு அதிகாரம் அளிக்கிறீர் என்று நம்புகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

சாட்சி: “தினமும் நீங்கள் அனுப்பும் உற்சாகம் அளிக்கும் செய்திக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சில சமயங்களில் இதை வாசிக்கும்போது நான் அழுதிருக்கிறேன், ஏனென்றால் அந்த நேரங்களில், நான் தேவனுக்கு எவ்வளவு விலையேறப்பெற்ற ஒரு நபராய் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது, ​​எனது வேலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட, எனக்கு மன அழுத்தம் குறைவாகவே உண்டாகிறது. முன்பெல்லாம், அவர்கள் என்னை கொடுமைப்படுத்தி கடினமாய் பேசுவதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும், நான் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாவேன். ஆனால் இப்போது, ​​அவர்கள் எனக்கு எதிராக கெட்ட வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டாலும், “ஜனங்கள் என்னை எப்படிப் பார்த்தாலும் பரவாயில்லை, நான் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்ற ஒரு நபராய் இருக்கிறேன், நான் இருக்கிற வண்ணமாகவே அவர் என்னை நேசிக்கிறார்” என்று நான் எப்போதும் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன். அந்த வார்த்தைகளை ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ என்ற தினசரி தியான வார்த்தைகளிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். இனிமேல் நான் காயப்படுத்தப்படுவதில்லை, ஏனென்றால் தேவன் என்னுடன் இருக்கிறார் என்பது இப்போது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு உதவியதற்காக ‘அனுதினமும் ஒரு அதிசயத்திற்கு’ மிகவும் நன்றி சொல்கிறேன். இப்போது தேவனுடைய அற்புதம் என் வாழ்வில் நடைபெறுகிறது என்பதை நான் அறிவேன்.” (Praiselin)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!