ஒரு புதிய நாள் துவங்குகிறது

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒரு புதிய நாள் துவங்குகிறது

ஒரு புதிய நாள் தொடங்குகிறது, கர்த்தர், உன் மேய்ப்பர், உன் வழிகாட்டி, நடக்கவிருக்கும் அனைத்தையும் அவர் முன்னறிந்திருக்கிறார். வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறபடி, அவர் உன்னுடன் நடக்க விரும்புகிறார்.

“அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.” (யாத்திராகமம் 33:14)

உன் விருப்பத்தின்படி இந்த நாளைத் திட்டமிட முயற்சிப்பதற்குப் பதிலாக, ஆண்டவரின் விருப்பத்தின் மீதும் அவர் உனக்காக ஏற்கனவே தயார் செய்திருப்பதின் மீதும் உன் கவனத்தை செலுத்து.

இந்த நாளை உன் வாழ்வில் கூட்டிச்சேர்த்ததற்க்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்து! நீ இனி வாழவிருக்கும் வாழ்க்கைக்கு இன்று தான் முதல் நாள்.

அவர் மீது நம்பிக்கையாய் இரு. அவருடைய பிரசன்னத்தை நீ உணராவிட்டாலும் அவர் ஒவ்வொரு கணமும் உன்னுடன் கூடவே இருக்கிறார். நன்றியுணர்வின் மனப்பான்மையை நீ கொண்டிருக்கும்போது, அது உன் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் அவருடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க உதவும்.

உனக்கு மிகவும் பாதுகாப்பானதும் உறுதியானதுமான இடம் எது என்றால், நீ ஆண்டவரின் அருகில் இருப்பதும், அவர் உன் அருகில் இருப்பதும் தான் என்பதை நினைவில்கொள். இந்த நாளை, இந்த பயணத்தை, இயேசுவோடு உணர்ந்து மகிழ்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!