ஒரு நொடி கூட காத்திருக்க வேண்டாம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒரு நொடி கூட காத்திருக்க வேண்டாம்!

நீ எப்போதாவது வீடு இடமாற்றம் செய்திருக்கிறாயா? அப்படி இருந்திருந்தால், வீட்டில் உள்ள கனமான பொருட்கள் (அலமாரி, கட்டில், மேஜை போன்ற) அனைத்தையும் நீயாகவே நகர்த்தி எடுத்து செல்ல முயன்றிருக்க மாட்டாய் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இந்தப் பொருட்கள் அனைத்தையும் நீ தனியாக தூக்கிச் செல்ல முடியாதபடிக்கு அவை அதிக கணமுள்ளதாய் இருக்கும். இதேபோல உன் துக்கங்கள் மற்றும் கவலைகளை நீயாகவே சுமந்துகொண்டிருந்தால் என்ன ஆகும்?

“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (வேதாகமத்தில் சங்கீதம் 55:22ஐப் பார்க்கவும்)

உன் பாரத்தைக் கர்த்தர் மீது வைத்துவிடும்படிக்கு நீ நேரடியாக அழைக்கப்படுகிறாய்… இன்னும் சொல்லப்போனால், உனக்கு மிகவும் பாரமானது எதுவோ, உன் சொந்த பலத்தால் உன்னால் தாங்க முடியாதது எதுவோ அதைக் கர்த்தர் மீது வைத்துவிடு. இந்த அழைப்பு ஒரு வாக்குத்தத்தத்துடன் வருகிறது. தேவன் உன்னை ஆதரிப்பார். அவர் உன்னைத் தாங்குவார்!

“பாவ சஞ்சலத்தை நீக்க” என்ற பழைய பாடல் ஒன்று உனக்கு நினைவிருக்கிறதா? அந்தப் பாடல் இவ்வாறு கூறுகிறது, “பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே….. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்… நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்”.

இது எவ்வளவு உண்மை? என் நண்பனே/தோழியே, ஒரு நொடி கூட காத்திருக்காதே… இந்த நொடியிலேயே உன் பாரத்தை அவர் மீது வைத்துவிடு!

இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்படி நான் உனக்கு அழைப்பு விடுக்கிறேன்: “கர்த்தாவே, என் நிலைமையை நீர் பார்க்கிறீர். நான் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்பது மற்றவர்களைவிட உமக்கு நன்றாகத் தெரியும். என் பாரங்களையும், என் துன்பங்களையும், கவலைகளையும், என் பயங்களையும் உம் மீது வைத்துவிடுகிறேன். நீர் எனக்கு உதவுவீர் என்பது எனக்கு நிச்சயம் தெரியும்… அதனால்தான் இனிமேல் நான் ஒருபோதும் கவலைப்படமாட்டேன் என்று தீர்மானித்திருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் நீர் எனக்கு அருளும் உமது கிருபைக்காகவும் விசுவாசத்திற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!