ஒரு குழந்தையைப் போன்ற உன் இருதயம் எங்கே போனது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒரு குழந்தையைப் போன்ற உன் இருதயம் எங்கே போனது?

இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள்,​​ ஜனங்கள் சிறு குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்து, அவர்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். இந்த ஜனங்கள் இயேசுவைத் தொந்தரவு செய்ததாக நினைத்துக்கொண்டு, சீஷர்கள் அவர்களைத் திட்டினர்.

இயேசு விசனமடைந்து, “‘… எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'” என்று சொன்னார் (மாற்கு 10:14-15ஐப் பார்க்கவும்).

ஆனால், ஒரு குழந்தையின் இருதயம்போல் மாற வேண்டும் என்ற இவ்வசனத்திற்கான அர்த்தம் என்ன?

  • ஒரு குழந்தை அவனுடைய/அவளுடைய அப்பாவுடன் நேரத்தைச் செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது… உன் பரலோகத் தகப்பனுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியடைகிறாயா?
  • ஒரு குழந்தைக்கு எல்லாவற்றையும் அப்படியே நம்பும் இருதயம் இருக்கிறது… ஒரு குழந்தை யார் என்ன சொன்னாலும் நம்பும். ஆண்டவருடைய வார்த்தை சொல்வதை நீ விசுவாசிக்கிறாயா, முழு மனதுடன் நம்புகிறாயா?
  • ஒரு குழந்தை எப்போதுமே யதார்த்தமாக செயல்படும்… அவன்/அவள் தான் எப்படி நடக்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும், எது நல்லது என்று சிந்தித்துச் செயல்படுவதில்லை. யதார்த்தமாக செயல்படுகிறது. தேவனுடனான உன் உறவில் நீ இன்னும் யதார்த்தமாக இருக்கிறாயா?

குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் பல விஷயங்கள் உள்ளன…

ஒரு குழந்தையைப் போன்ற உன் இருதயம் எங்கே போனது? அது இன்னும் உனக்குள் நன்றாக உயிர்ப்புடன் இருக்கிறதா?

நீ என்னுடன் இணைந்து ஜெபிக்க விரும்புகிறாயா? நாம் ஜெபிக்கலாம்… “கர்த்தாவே, மீண்டும் ஒரு குழந்தையின் இருதயத்தை, வாழ்க்கையை ஆச்சரியத்தால் நிறைந்து பார்க்கும் ஒரு இருதயத்தை, உம்மையும் உமது வாக்குத்தத்தங்களையும் முழுமையாக நம்பும் இருதயத்தை எனக்குக் கொடுக்கும்படி நான் உம்மிடம் மன்றாடுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

தேவனுடனான உனது ஐக்கியத்தில் நீ முன்னேறிச் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துகள் நண்பனே/ தோழியே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!