ஒன்றாக, நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைப்போம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒன்றாக, நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைப்போம்!

நான் உங்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சல் செய்தியின் முடிவிலும் “நீங்கள் இருப்பதற்கு நன்றி” என்று எழுதி கையெழுத்திடுவேன் என்பது உங்களுக்கு தெரியும். இந்த சொற்களால் தொடப்பட்ட அநேகர், யாரோ ஒருவர், நான் உயிரோடு இருப்பதற்கும் நன்றி சொல்லுகிறாரே என்று மிகவும் திகைந்து,  அவர்களுடைய சாட்சிகளை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

“சில நாட்களில் என் பெயரை சொல்லி என்னோடு ‘உரையாடல்’ செய்வது உங்களுடைய மின்னஞ்சல்கள் மட்டும் தான். யாரோ ஒருவர் என் செயல்கள் அனைத்தும் முக்கியமானது என கருதி, நான் இருப்பதற்கும் நன்றி என்று சொல்லுவது என் மனதை தொட்டது. நீங்கள் இவ்வாறு “நீங்கள் இருப்பதற்கு நன்றி/நீங்கள் உயிரோடு இருப்பதற்கு நன்றி” என்று சொல்வதை நான் எனக்கு மிகவும் அருமையாக கருதுகிறேன். ஏனென்றால் சிலநேரங்களில் ஓய்வில்லாத என் வேலையின் காரணமாக நான் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி எனக்கு இருப்பதில்லை. நான் நானாக வாழும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. உங்களுடைய இந்த சொற்கள் எனக்கு மிகுந்த ஆறுதலாக மட்டுமின்றி, பரபரப்பான வாழ்க்கையின் நடுவில் என்னை உயிர்பெறவும் செய்கிறது. “ (ஜாக்கி)

“இனிய மாலை வணக்கம் எரிக், முதலாவதாக நான் வாழ்வதை நீங்கள் பாராட்டுவதற்காக நன்றி. நான் இதை வெறும் வார்த்தைகளாக மட்டும் சொல்லவில்லை, என் பெயரின் அர்த்தத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். என் பெயரின் அர்த்தம் தயவு/ஒரு ஆசீர்வாதம் என்பதை நான் கண்டறிந்தும், என் பெயருக்கேற்ப என் வாழ்வின்  இந்த 30 வருடமும் யாருக்கும் ஆசீர்வாதமாக இல்லாமல் பயனற்று இருக்கிறேன் என்று உணர்ந்தேன். நான் இருப்பதற்கும் நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதை வாசிக்கும்போது என் உள்ளம் மிகுந்த நன்றியோடு திகைத்தது. நான் இருப்பதின் மீது உங்களுக்கு அக்கறையுண்டு என்பதை எனக்கு நீங்கள் தெரியப்படுத்தியதால் என் உள்ளம் உங்களை பாராட்டுகிறது.” (ஆசீர்வாதம்).

“பல வருடங்கள், என் தாய் நான் ஏன் பிறந்தேன் என்று என்னை நிந்தித்தார்…நான் தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்….ஆனால் ஆண்டவர் எப்போதுமே என் மனதையும் என் முழு ஜென்மத்தின் ஆழங்களை தொட தெரிந்த மனிதர்களை நான் கடந்து செல்லும் பாதையில் வைத்திருக்கிறார். ஆனால் “நீங்கள் இருப்பதற்கு நன்றி” என்னும் சொற்கள், ஒவ்வொரு நாளும் கடவுள் என்னிடம் சொல்ல விரும்பும் அனைத்தையும் சுருக்கமாகக் சொல்கிறது ….நன்றி”. (சாராள்)

இந்த வேதவசனம் எனக்கு மிகவும் பிடிக்கும் : “கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (வேதாகமம், எபேசியர் 4:29)

ஒன்றாக, இந்த உலகத்தை மாற்றும் திறன் நமக்கு உண்டு, நம்மைச் சுற்றியுள்ள சிந்தனைக்கோணங்கள், மனநிலைகள், இவற்றையும் நம்மால் மாற்றமுடியும்! அவருடைய ராஜ்யத்தின் கலாச்சாரத்தை நாம் சுமந்து செல்வதன் மூலம் இந்த உலகத்திற்குள் வாழ்வின் சுவாசத்தை நம்மால் கொண்டுவர முடியும். இப்படி உருவாகும் ஒரு சுற்றுப்புறத்தில், எல்லாம் சாத்தியமாகும், ஒவ்வொரு மனிதரும் நேசிக்கப்படுகிறர்வர்களாகவும், விலையேறப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

ஆண்ட்ரியா எழுதியது, “வணக்கம் எரிக். ஆஹா! “நீங்கள் இருப்பதற்கு நன்றி” என்னும் வார்த்தைகள் ஒருவரின் வாழ்க்கைக்குள் எவ்வளவு அமைதியையும் ஊக்கத்தையும் கொண்டுவருகிறது என்பது வியப்பாக உள்ளது. நான் உங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மின்னஞ்சல் செய்தியின் முடிவிலும் எழுதியிருக்கும் இந்த வார்த்தைகளுக்காக நான் உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். எனக்கு முதலில் இதனுடைய அர்த்தம் புரியவில்லை. ஆனால் இப்போது அதன் அர்தத்தை நான் புரிந்து கொண்டேன், எனக்கு நீங்கள் விளக்கம் கூறியதற்காகவும் நன்றி. இனிமேல் நான் இதை பார்க்கும் ஒவ்வொருமுறையும், புத்துணர்ச்சி அடைவது மட்டுமின்றி, மற்றவர்களிடமும் “நீங்கள் இருப்பதற்கு நன்றி” என்று சொல்ல துவங்க போகிறேன்.உங்கள் தனிப்பட்ட எழுத்தின் காரணமாகவும், எனக்கு கிடைத்த இந்த மின்னஞ்சல்கள் ஒரு உண்மையான ஆசீர்வாதம்.”

நீங்களும் இவரை போல உங்களை சுற்றி இருக்கும் அனைவரிடமும் “நீங்கள் இருப்பதற்கு நன்றி” என்று பகிர ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

ஆண்டவர் உங்களை இன்று மிகுதியாக ஆசீர்வதிப்பாராக!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!