எழுந்து நட!

முகப்பு ›› அற்புதங்கள் ›› எழுந்து நட!

உனக்கு எப்படி என்று எனக்கு தெரியாது ஆனால், அந்த தொழுநோயாளி குணமானதைப் போன்ற ஒரு அதிசயத்தை என் வாழ்நாளிலே நான் கண்டதில்லை. என் கண் முன்னே அவனது காயங்கள் ஆறுவதை நான் பார்த்தேன்!

அந்த நேரத்தில், என் நினைவுக்கு வந்த முதல் விஷயம் என்னவென்றால், இயேசு ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த முடியுமானால், நிச்சயமாக அவரால் ஒரு திமிர்வாதக்காரனையும் நடக்க வைக்க முடியும் என்பதுதான்! என்னால் உற்சாகத்தை அடக்கி வைக்க முடியவில்லை. தன் சிறுவயதிலிருந்தே முடங்கிக் கிடக்கின்ற என் நல்ல நண்பனிடம் சென்று என் கண்கள் பார்த்ததைச் சொல்ல வேண்டும் என்று புறப்பட்டேன்.

என் நண்பருக்கு சற்று சந்தேகம் இருந்தது, ஆனால் அவரை இயேசுவைப் பார்க்கச் செல்லுமாறு தேற்றினேன். ஒரு தள்ளுவண்டியில் நான்கு நண்பர்களின் உதவியோடு அவரை தூக்கிக்கொண்டு நகர்ப்பகுதிக்கு எங்கள் பயணத்தை தொடங்கினோம்.

இயேசுவைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமாக இல்லை. அவர் போதித்துக் கொண்டிருந்த வீட்டின் முன்பு திரள் கூட்ட ஜனங்கள் கூடியிருந்தார்கள். மரப்படுக்கையுடன் இயேசுவை எப்படி நெருங்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போதுதான் வீட்டின் கூரையில் ஏற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இயேசுவை பின்பற்றுபவளான ஒரு சிறுமி இதற்கான சிறந்த வழியை காட்டி உதவினாள்.

நான் கூரையின் மீது ஏறிய பின், என் நண்பருக்காக இயேசுவிடம் பரிந்து பேசி, அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதத்தைச் செய்யும்படி மன்றாடினேன். என் நண்பனை கீழே கயிற்றின் மூலமாக இறக்கி விட, வீட்டின் கூரையை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அகலப்படுத்த வேண்டியிருந்தது.

அவனிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் இதுவே “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று சொன்னார் (மாற்கு 2:5)

இயேசு இப்படிச் சொன்னதைக் கேட்டபோது அவனுடைய இதயம் படபடத்தது என்று என் நண்பர் பின்னர் என்னிடம் சொன்னார். என் நண்பனை பிடித்து வைத்திருந்த பாவங்களின் பாரம் அவனிடமிருந்து மறைந்துவிட்டதை உணர்ந்தான். அது மிகவும் அருமையான விடுதலையின் அனுபவமாக அவனுக்கு இருந்தது!

இது மட்டுமல்ல. இயேசு தொடர்ந்து சொன்னார், “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (மாற்கு 2:10-11)

என் நண்பரின் கால்கள் அசைய ஆரம்பித்தன. மெதுவாக, அதேநேரம் சீராக, தனது கால்களால் எழுந்து, கூட்டத்தின் கூச்சல் மற்றும் திகைப்பிற்கு மத்தியில் அடியெடுத்து வைக்கத் தொடங்கினார். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லையென்றாலும், இது உண்மை. என் நண்பர் பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக நடந்தார். ஒரு அற்புதம் நடந்தது!

எங்கள் வாழ்க்கை என்றென்றைக்கும் மாற்றப்பட்டது.

என் பெயர் தமார், நானும் என் நண்பனும் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டோம்.

குறிப்பு: அன்பரே, நமக்காக பரிந்து பேசும் நண்பர்களைப் பெறுவது மிகவும் விலை மதிப்பற்ற ஒன்று! இன்று, உங்களுக்காகப் பரிந்து பேசும் அந்த நண்பராக இருக்க நான் விரும்புகிறேன். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்: “ஆண்டவரே, என் அன்பான நண்பருக்காக ஜெபிக்கிறேன், நீர் இவரது வாழ்க்கையில் வியப்பான அற்புதங்களைச் செய்வீராக, மேலும் எனது நண்பர் எதிர் நோக்கும் அனைத்து சிக்கலான சூழ்நிலைகளிலும் நீர் உதவி செய்வீராக. பாவங்கள் தடையாக இருந்தால், இவர் அதிலிருந்து முழு சுதந்திரத்தை உணரட்டும். இதனால் இவர் உமக்கு உத்வேகத்துடன் ஊழியம் செய்ய முடியும். உமது நாமம் இவர் வாழ்வில் உயர்த்தப்படட்டும்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!” நீங்களும் மற்றவர்களுக்காக விண்ணப்பம் செய்பவராக இருப்பீர்களா?

நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!