எல்லைக்கோடு உனக்கு முன்னால் உள்ளது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› எல்லைக்கோடு உனக்கு முன்னால் உள்ளது!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் முக்கிய சாதனைகளை நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக, இந்த சாதனைகளில் ஒன்றுக்கு உளவியல் ரீதியாக அதிக விடாமுயற்சியும் சரீரத்தில் சகிப்புத்தன்மையும் தேவைப்படுகிறது… 26 மைல்களுக்கு மேல் நீண்ட தூர ஓட்டமாகிய மாரத்தான் ஓட்டப்பந்தயம் இதற்கு ஒரு உதாரணம்!

தங்கள் பந்தயத்தை ஓடி முடிக்க முயற்சிக்கும் இதே விளையாட்டு வீரர்கள், கனமான ஆடைகளை அணிந்துகொண்டு தங்கள் கை நிறைய விளையாட்டு பைகளை சுமந்து செல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். அசாத்திய திறமையும், ஆயத்தமும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும் இருந்தும் கூட, தாங்கள் சுமக்கும் சுமையின் பாரங்களால் அவர்களது வேகம் குறைந்தால், இவை அனைத்தும் அவர்களுக்குப் பயன்படாமல் போய்விடும்!

வெற்றி பெற வேண்டிய ஒரு பந்தயம் உனக்கும் உண்டு, மேலும் வெற்றியை அடைவதற்கான திறவுகோல்களில் ஒன்றை தேவனுடைய வார்த்தை உனக்கு வழங்குகிறது…

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” (வேதாகமத்தில் எபிரேயர் 12:1ஐப் பார்க்கவும்)

அதற்கான படிகள் இதோ:

  • உன் சுமைகளையும் பாரங்களையும் ஒதுக்கி வை.
  • பாவத்தை விட்டுவிடு.
  • இயேசுவையே நோக்கி பார்த்து ஓடு!

எல்லைக்கோடு உனக்கு முன்னால் உள்ளது! இன்று முதல், நேற்றைய சம்பவங்கள் உன் நிகழ்காலத்தை பாதிக்கவோ அல்லது உன் எதிர்காலத்தை நிர்ணயிக்கவோ அனுமதிக்காதே. விடாமுயற்சியுடன் ஓடி பரிசை வெல்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!