எல்லாம் வல்ல ஆண்டவரை எந்நேரமும் துதி

முகப்பு ›› அற்புதங்கள் ›› எல்லாம் வல்ல ஆண்டவரை எந்நேரமும் துதி

நான் ஆசீர்வாத காலத்தில் இருந்தாலும் சரி, சோதனையின் காலத்தில் இருந்தாலும் சரி, வானம் நீலமாக இருந்தாலும் சரி, சாம்பலாக இருந்தாலும் சரி, எல்லா நேரங்களிலும் ஆண்டவரைத் துதிக்கவும் அவருக்கு நன்றி சொல்லவும் கற்றுக்கொண்டுள்ளேன். ஏன் தெரியுமா? நாம் உற்சாகமடைவதற்கும் ஆவியில் பெலனடைவதற்கும் ஆண்டவரைத் துதிப்பது ஒரு அற்புதமான வழியாகும். அமளி மற்றும் குழப்பத்தின் நடுவில், உன் வாழ்க்கையில் நீ சந்திக்கும் சோதனைகள் மற்றும் சிரமங்களின் மத்தியில், உன் பாலைவனத்தில், உன் மகிழ்ச்சியில், உன் வலியில், ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஆண்டவரை துதிக்க மறக்காதே.

சங்கீதம் 113:3 இவ்வாறு அறிக்கையிடுகிறது: “சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.”

எல்லா சூழ்நிலையிலும், ஆண்டவரை துதித்து மகிமைப்படுத்து.

உன் வாழ்க்கையில் அவர் செய்த அனைத்திற்காகவும் எதிர்காலத்தில் அவர் தொடர்ந்து செய்யப்போகும் அனைத்திற்காகவும், நன்றியுணர்வுடன் நிறைந்து, “நன்றி ஆண்டவரே!” என்று அவரிடம் சொல்.

எபிரெயர் 13:15 நமக்கு சொல்கிறது… “ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” என்று.

எல்லா சூழ்நிலையிலும், ஆண்டவருக்கு நன்றி செலுத்து.

சங்கீதம் 9:2 கூறுகிறது… “உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.” என்று.

எல்லாம் கடினமாகத் தோன்றினாலும், ஆண்டவரை துதிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடு. இதுவே அவருக்காக துடிக்கும் மற்றும் அவருக்காக வாழும் இதயத்தின் ரகசியம்!

ஆண்டவரை இன்று என்னுடன் சேர்ந்து துதித்து கொண்டாடு!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!