என் தேவன் உன் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› என் தேவன் உன் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்

“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” (பிலிப்பியர் 4:19)

எங்கள் ஊழியத்தின் ஆரம்பக் காலத்தில், நானும் என் மனைவியும் விசுவாசத்தினால் வாழ்வதைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்ட ஒரு இடத்தில் வைக்கப்பட்டோம். தேவாலயத்தில் சிறிய வசதிகள் இருந்தன, பல மாதங்களுக்குப் பிறகு, நிதி நெருக்கடியில் சிக்காமல் எங்களுக்கு ஊதியம் கொடுப்பது தேவாலயத்திற்கு கடினமாகிவிட்டது. என் மனைவியுடன் சேர்ந்து ஜெபித்தபிறகு, எங்கள் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு கேட்டோம். அப்போதிலிருந்து, எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் ஒரு பகுதியே வழங்கப்பட்டது. எங்களது முதல் குழந்தையை நாங்கள் அப்போதுதான் பெற்றெடுத்திருந்ததால் எங்களுக்கு இது இன்னும் சவாலாக இருந்தது.

நாங்கள் இவ்வாறு விசுவாசத்தோடு அர்பணிப்பின் முதல் படியை எடுத்து வைத்தோம். மேலும், இளம் தம்பதிகளாகிய எங்கள் வாழ்வில் இதற்குப்பின் பல மேலான நல்ல அனுபவங்கள் எங்களைப் பின்தொடரும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆம், ஆண்டவர் எங்கள் தேவைகள் அனைத்தையும் சந்திப்பதை நாங்கள் கண்டோம்! மட்டுமின்றி எங்கள் தேவாலயம் ஆசீர்வதிக்கப்படுவதையும் கண்டோம்!

தாவீது ராஜாவுடன் சேர்ந்து இப்படி அறிக்கையிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.” தாவீது சாகவேண்டுமென்று பலர் அவரைத் துரத்திய போது, அவர் துன்பமான காலங்களை கடந்து சென்றார். ஆனால், கர்த்தராகிய அவருடைய மேய்ப்பர், தன்னைக் கவனித்துக்கொள்வார் என்றும், அவருடைய தேவைகள் எந்தநேரத்திலும் பூர்த்திசெய்யப்படாமல் போகாதென்றும் அவர் அறிந்திருந்தார்!

ஒரு வேதனையான, கடினமான நேரத்தை நீ கடந்து சென்றுகொண்டிருக்கிறாயா? ஆண்டவர் எல்லா நேரத்திலும் உன் தேவைகளை சந்தித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள். அவர் உன்னை ஒருபோதும் கைவிடவில்லை. அவர் எப்போதும் உன்னையும் உன் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உன் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்! நான் இதை விசுவாசிக்கிறேன் மற்றும் உன் வாழ்க்கையின் மீது அறிக்கையிடுகிறேன்… கர்த்தர் உன் மேய்ப்பராக இருப்பதால், நீ தாழ்ச்சியடையமாட்டாய். நீ அவருடைய அன்பான ஆட்டுக் கூட்டத்தில் ஒருவர், அவர் உன்னை பெயரிட்டு அறிந்திருக்கிறார், அவர் உன்னை ஒருபோதும் விட்டுவிடமாட்டார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!