என்னுடன் வா

முகப்பு ›› அற்புதங்கள் ›› என்னுடன் வா

எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் என் வாழ்க்கை கிராமப்புறங்களுடன், குறிப்பாக திராட்சைத் தோட்டங்களுடன் இணைந்திருந்தது. சொல்லப்போனால், என் தந்தை நாங்கள் இருந்த பகுதியிலேயே மிகவும் பிரபலமான திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளராக இருந்தார்! எங்கள் தோட்டத்திலிருந்து வந்த திராட்சை ரசம், சுவையில் மிகுந்ததாக கருதப்பட்டது.

அன்றிரவு கானாவூரில் நடந்த திருமண விருந்தில் திராட்சை ரசம் தீர்ந்து போனபோது நான் தோமாவுடன் இருந்தேன், இயேசு செய்த அற்புதத்தை நேரில் பார்த்தேன். என் கண்கள் பார்த்ததை என்னால் அசட்டை செய்ய முடியவில்லை! இயேசு தோமாவை தனக்குப் பின் வரும்படி அழைத்தார், எனக்கும் அழைப்பு இருந்தது. என் முழு ஜீவனும் இந்த அடியை எடுத்து வைக்க என்னை ஊக்குவித்தது..

ஆனால் என் அப்பாவிடம் எப்படி சொல்வது? முழு வணிகமும் எங்கள் பொறுப்பில் மட்டுமே இருந்தது. இயேசுவைப் பின்பற்றுவது என்பது எங்கள் வணிகத்தையம், வேலையையும், என் அப்பா எங்களுக்குள் ஊக்குவித்த கனவுகள் மற்றும் இலட்சியங்களையும் விட்டுவிட்டு செல்வதாகும்.

என் தந்தையிடம் இதை எப்படி விளக்கப் போகிறேன் என்று நினைத்தபோது என் இருதயம் படபடப்பதை என்னால் உணர முடிந்தது. என் தந்தை உறுதியான கொள்கைகளைக் கொண்ட ஒரு நபர், எனவே அவர் எப்படி இதை எடுத்துக்கொள்வார் என்று நான் கொஞ்சம் பயந்தேன். சொல்லப்போனால், நாங்கள் இதைப் பற்றி அவரிடம் கூறியபோது அவர் மிகவும் கோபமானார். நாங்கள் நீண்ட நேரம் வாதிட்டோம், அவரிடமிருந்து எல்லா வகையான எதிர்மறையான கருத்துக்களையும் கேட்க வேண்டி இருந்தது.

நாங்கள் உறுதியான தீர்மானம் எடுத்திருந்ததால் மற்றும் என் தந்தை இயேசுவிடம் முதலில் பேச வேண்டும் என்று கேட்டதால், எங்கள் பயணத்தில் அவர் எங்களுடன் வர ஒப்புக்கொண்டோம். நீங்கள் நினைப்பது போல், அது ஒரு எளிதான பயணம் அல்ல; காற்றில் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது.

பல நாட்களுக்குப் பிறகு, இறுதியாக நாங்கள் இயேசுவைச் சந்திக்கும் இடத்திற்கு வந்தோம். என் தந்தை அவரிடம் பேசினார், பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவர் அழுவதை நான் பார்த்தேன். பேசி முடித்தபின், என் தந்தை தோமாவையும் என்னையும் கட்டியணைத்து முத்தமிட்டு விடைபெற்றுச் சென்றார். நான் என் தந்தையின் இருதயத்தை நொறுக்கிறேன் என்ற உணர்வை என்னால் தாங்கவே முடியவில்லை!

இயேசுவைப் பின்பற்றுவது எளிதான முடிவு அல்ல. ஆனால் அவர் என்னை அழைத்தார் என்பதையும், அவரைப் பின்தொடர்வதை விட முக்கியமானது எதுவுமில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆம், அவருடைய சீடராக இருப்பதன் ஆசீர்வாதம் எந்த சிரமங்களையும் விட உயர்ந்ததாக உள்ளது! (மத்தேயு 19:29)

என் பெயர் ரமா, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பான நண்பரே, ஒருவேளை நீயும் கூட, இயேசுவைப் பின்பற்றும் முடிவை எடுத்ததற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து எதிர்ப்பையும் நிராகரிப்பையும் அனுபவிக்க வேண்டியிருக்கலாம். இது கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் உன் வாழ்க்கையில் ஆண்டவரின் விருப்பப்படி நீ நடப்பதை எதனுடனும் ஒப்பிட முடியாது! இன்று இது போன்ற ஒரு கடினமான சூழ்நிலையை நீ சந்திக்க நேர்ந்தால், நீ தனியாக இல்லை என்பதை நான் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

உன்னை வழிநடத்தவும், தேற்றவும், பலப்படுத்தவும் ஆண்டவர் உனக்கு அருகில் இருக்கிறார். உன்னை எதிர்க்கும் இந்த மக்களுடன் மீண்டும் இணைந்து ஆண்டவரின் அன்பை அவர்களுக்கு சிறப்பான முறையில் காட்டு…
நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!